search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மாநிலம் கடனில் சிக்கி தவிக்கிறது- அமித்ஷா குற்றச்சாட்டு
    X

    தெலுங்கானா மாநிலம் கடனில் சிக்கி தவிக்கிறது- அமித்ஷா குற்றச்சாட்டு

    • அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அங்கு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கானாவில் சோமாஜி குடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் (தெலுங்கானா மக்கள்) வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து கட்சிகளையும் ஆய்வு செய்தவுடன் நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

    சந்திரசேகரராவின் 10 ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்கும்போது, ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்து தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதை காண்கிறோம்.

    இங்கு இளைஞர்கள் மனமுடைந்து போயுள்ளனர். விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×