search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கணவருக்கு 2 பெண்கள் போட்டியால் வசிய பூஜைக்கு வரவழைத்து மந்திரவாதி கொலை
    X

    கணவருக்கு 2 பெண்கள் போட்டியால் வசிய பூஜைக்கு வரவழைத்து மந்திரவாதி கொலை

    • மந்திரவாதியின் பிணத்தை அஸ்மா வீட்டில் வீசிவிட்டு வந்தனர்.
    • மந்திரவாதி கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் என்.சி.சி காலனியை சேர்ந்தவர் ஜாகீர் பாஷா. இவர் நெல்லூரில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் காவியா என்பவர் ஜாகீர் பாஷா மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவருக்கு சாய்பிரியா என்ற மகள் உள்ளார்.

    காவியாவை ஜாகீர் பாஷா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு காவியா தனது பெயரை சமீரா என மாற்றிக் கொண்டார்.

    இந்த நிலையில் ஜாகீர் பாஷா அஸ்மா என்ற மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜாகிர் பாஷா 2-வது மனைவியுடன் தங்கினார்.

    தனது கணவரை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என காவியா திட்டம் தீட்டினார்.

    அதன்படி கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த மணிகாந்த் (வயது 33) என்ற மந்திரவாதியை தொடர்பு கொண்டார். அப்போது அவர் வசிய மாந்திரீகம் செய்தால் உன்னுடைய கணவர் உன்னிடம் வந்துவிடுவார் என தெரிவித்தார்.

    இதையடுத்து மணி காந்தை நெல்லூருக்கு வரவழைத்த சமீரா தனது வீட்டில் வைத்து பூஜைகள் செய்தார். பூஜைக்குப் பிறகும் தனது கணவர் தன்னிடம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்று தனது மகள் சாய்பிரியா மற்றும் தோழி கிருஷ்ணவேணி ஆகியயோருடம் ஆலோசனை நடத்தினார்.

    மந்திரவாதியை கொலை செய்து 2-வது மனைவி வீட்டில் வீசிவிட்டால் கொலைக்கான பழி அவர் மீது விழுந்து விடும்.

    அஸ்மா ஜெயிலுக்கு சென்று விட்டால் ஜாகிர் பாஷா தன்னுடன் நிரந்தரமாக தங்கி விடுவார் என எண்ணினர். அவர்கள் திட்டமிட்டபடி மந்திரவாதி மணிகாந்தை மீண்டும் வீட்டுக்கு வரவழைத்தனர்.

    மந்திரவாதிக்கு பாலில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர். அவர் மயங்கியதும் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

    மந்திரவாதியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினர். பின்னர் யாருக்கும் தெரியாமல் மந்திரவாதியின் பிணத்தை அஸ்மா வீட்டில் வீசிவிட்டு வந்தனர்.

    மறுநாள் காலை அஸ்மா வீட்டில் சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த தகவல் நெல்லூர் போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    மந்திரவாதி கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். இந்த நிலையில் சமீரா மீது சந்தேகம் ஏற்பட்டது.

    போலீசார் சமீராவை பிடித்து விசாரணை நடத்தியதில் கணவரை தன் பக்கம் இழுக்க மகள் மற்றும் தோழியுடன் சேர்ந்து மந்திரவாதியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் சமீரா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மகள் சாய்பிரியா, தோழி கிருஷ்ணவேணி ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×