என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தெலுங்கானாவில் பீர் தட்டுப்பாடு - மது பிரியர்கள் அவதி
- கிராம பகுதியில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- பல சிறிய மற்றும் நடுத்தர பீர் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை மேற்கொண்டுள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
இதனால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராம பகுதியில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து மதுக்கடை ஊழியர்கள் கூறுகையில்:-
தெலுங்கானா மாநிலத்தில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மதுபான ஆலைகளுக்கு ரூ.1000 கோடி நிலுவைத் தொகை உள்ளது. ஆனால் கலால் துறை ரூ.100 கோடி மட்டுமே செலுத்தி உள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களாக பீர் உற்பத்தி செய்ய முடியவில்லை.
பல சிறிய மற்றும் நடுத்தர பீர் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை மேற்கொண்டுள்ளன. இதனால் மது கடைகளுக்கு பீர் சப்ளையை படிப்படியாக குறைத்துள்ளன.
மாநிலத்தில் பெருமளவில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு கலால்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.