என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
விபத்தில் இறந்த தங்கைக்கு சிலை வடித்து ஊர்வலமாக கொண்டு சென்ற சகோதரர்கள்
- கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.
- விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சங்கராபுரம் மண்டலம் கட்சி பிடி பகுதியை சேர்ந்தவர் காபு மணி (வயது 29). இவருக்கு வரலட்சுமி என்ற அக்காவும், சிவைய்யா என்கிற அண்ணன் மற்றும் தம்பி ராஜா உள்ளனர்.
இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.
விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து காபு மணிக்கு 7 அடி உயரத்தில் உலோக சிலை வடித்தனர். ரக்சா பந்தன் விழாவையொட்டி அவரது அக்கா வரலட்சுமி, அண்ணன் சிவைய்யா மற்றும் தம்பி ராஜா ஆகியோர் காபுமணி உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் தன்னுடைய தங்கை பைக் விபத்தில் இறந்து விட்டதால் பொதுமக்கள் வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
பின்னர் காபுமணி சிலையை தங்களது வீட்டிற்கு முன்பாக பிரதிஷ்டை செய்தனர்.
தங்கை மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.