search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கென்சிங்டன் சிக்னல் அருகே 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
    X

    கென்சிங்டன் சிக்னல் அருகே 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

    • தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றனர்.
    • மழைக்குப் பிறகு நகரின் பிடிஎம் லேஅவுட் பகுதிகளில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூர்:

    பெங்களூர் ஹலசூரில் உள்ள கென்சிங்டன் சிக்னல் சந்திப்பு அருகே இரவு 8 மணி அளவில் திடீரென 10 அடி ஆழத்தில் சிமெண்ட் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நில நடுக்கம் ஏற்பட்டிருக்குமோ? என பீதி அடைந்தனர்.

    பரபரப்பான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்புக்காக அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் பொதுமக்கள், வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடாதபடி சுற்றிலும் பேரிகார்டர் அமைத்து, எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது.

    இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு இந்த சிமெண்ட் சாலை போடப்பட்டது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நில நடுக்கம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் பலத்த மழைக்குப் பிறகு நகரின் பிடிஎம் லேஅவுட் பகுதிகளில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×