search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவிகளிடம் பாலியல் சீண்டல்- ஆசிரியர் சஸ்பெண்டு
    X

    மாணவிகளிடம் பாலியல் சீண்டல்- ஆசிரியர் சஸ்பெண்டு

    • தலைமை ஆசிரியையிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியருக்கு சாதகமாக மவுனமாக இருந்தார்.
    • தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தெலுங்கு ஆசிரியர் நரேந்தர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்தனர்.

    தனியார் தொண்டு நிறுவனம் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அகில் மகாஜனக்கு புகார் அனுப்பினர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சிர்சில்லா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் குமார் நரேந்திர சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தலைமை ஆசிரியை சாரதாவிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியருக்கு சாதகமாக மவுனமாக இருந்தார்.

    தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    Next Story
    ×