என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்பில் ராகுல் காந்தி- ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
- இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று பேசியதன் மூலம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
- மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ‘டூல்கிட்டின்’ நிரந்தர அங்கமாகி விட்டார்.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று பேசியதன் மூலம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். வலுவான இந்தியாவுக்கு எதிராக இந்திய எதிர்ப்பு சக்திகள் எப்போதும் பிரச்சினையாக உள்ளன. இந்திய ஜனநாயக நிலையை விமர்சித்ததன் மூலம், அந்நிய மண்ணில் அமெரிக்கா, ஐரோப்பா தலையீட்டை நாடுவதன் மூலமும் ராகுல் காந்தி நாட்டின் இறையாண்மையை தாக்கியுள்ளார்.
மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் 'டூல்கிட்டின்' நிரந்தர அங்கமாகி விட்டார். இந்தியாவையும் பாராளுமன்றத்தையும் ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட அரசையும், நீண்ட காலமாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தில் உள்ள மக்களையும் அவர் அவமதித்து விட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் காந்தியை ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.