என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியர்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
- பள்ளி மாணவ-மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் சில ஆசிரியர்களுக்கு மத்தியில், கிருஷ்ணா ரெட்டியின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
- ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா சேலூரு கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மர்மநபர்கள் அந்த பள்ளி கழிவறையின் கதவை உடைத்து நாசப்படுத்தியிருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் மாணவ-மாணவிகளால், பள்ளியின் கழிவறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக கிடந்தது. அத்துடன் பயங்கர துர்நாற்றமும் வீசியது. இதனால் மாணவ-மாணவிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணா ரெட்டி, பள்ளிக்கூட கழிவறைகளை சுத்தம் செய்ய முன்வந்தார். அதன்படி அவர் குழாய் மூலம் தண்ணீர் அடித்து துடைப்பானை கையில் பிடித்து கழிவறைகளை சுத்தம் செய்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் சில ஆசிரியர்களுக்கு மத்தியில், கிருஷ்ணா ரெட்டியின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் அவர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.