search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு அருகே இளம்பெண்ணை மதம் மாற்ற முயன்றதாக டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    பெங்களூரு அருகே இளம்பெண்ணை மதம் மாற்ற முயன்றதாக டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    • பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பெண்ணை மதம் மாற வற்புறுத்தியதாக தெரிகிறது.
    • பெண்ணின் பெயரை மாற்றியதாகவும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் எனக்கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் பிகர்னகட்டே பகுதியை சேர்ந்தவர் கலீல். இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு பாண்டேஸ்வா் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய சென்று வந்தார். இதனால் கலீலுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த பெண் அவரது கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி கலீல் கல்லாப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

    பின்னர் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அந்த பெண்ணை மதம் மாற வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும், அந்த பெண்ணின் பெயரை ஆயிஷா என மாற்றியதாகவும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் எனக்கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த இளம்பெண் பாண்டேஸ்வர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஒரு டாக்டரும் தன்னை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும், அய்மான் என்பவர் நட்பாக பழகி உல்லாசத்துக்கு வற்புறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி புதிய மதமாற்றத் தடைச் சட்டம், மற்றும் சட்டப் பிரிவு 354 (குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்)மற்றும் 506 (கொலை மிரட்டல்)ஆகியவற்றின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×