என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
'ஆணவம் பிடித்தவர்களை ராமர் 241-ல் நிறுத்தினார்'- பா.ஜ.க. மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர் தாக்கு
- ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக்கூடாது.
- இந்திரேஷ்குமார் இந்தியா கூட்டணியையும் விமர்சித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
சமீப காலமாக பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்காக வேலை பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் கண்னியமான தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை. ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக்கூடாது. மக்களை பற்றி நினைக்க வேண்டும் என கூறியிருந்தார். இது அவர் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் ஜெய்ப்பூரின் கனோட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார் பேசியதாவது, ராமர் மீது பக்தி செய்தவர்கள், ஆனால் படிப்படியாக திமிர் பிடித்தனர். அந்த கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் கொடுக்க வேண்டிய வாக்கு மற்றும் அதிகாரம் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பாராளுமன்ற தேர்தலில் 240 இடங்களை பிடித்தாலும், பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க. வை விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில் இந்திரேஷ்குமார் இந்தியா கூட்டணியையும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகயைில், ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் 234-ல் நிறுத்தப்பட்டனர். ராமரை வழிபடுபவர்கள் பணிவாக இருக்க வேண்டும். ராமரை எதிர்ப்பவர்களை இறைவன்தான் சமாளித்தார். ராமர் பாரபட்சம் காட்டுவ தில்லை, தண்டிப்பதில்லை என்றார்.