என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பெங்களூருவில் தண்ணீருக்காக மாதம் ரூ. 25 ஆயிரம் செலவு செய்யும் பொதுமக்கள்
- பெங்களூருவில் நிலவிய குடிநீர் பிரச்சனையால் பலர் சொந்த ஊருக்கு திரும்பினர்.
- வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தண்ணீருக்காக எங்களது சேமிப்பே கரைகிறது என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏராளமான குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளி நாடுகளை சேர்ந்தவர்களும் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பெங்களூரு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரு மாநகரில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடியது. குடிநீருக்காக பொதுமக்கள் பல மணி நேரம் கேனுடன் காத்திருக்கும் சூழ்நிலை நிலவியது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை வீட்டில் இருந்தே வேலைப்பார்க்க அறிவுறுத்தினர். இதே போல் சில பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. பெங்களூருவில் நிலவிய குடிநீர் பிரச்சனையால் பலர் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்த நிலையில் பருவமழை கைகொடுத்ததால் பெங்களூரு மாநகராட்சி நிலைமையை சமாளித்தது. இதனால் குடிநீர் பிரச்சனை நீங்கியது. இருந்தாலும் பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட மகாதேவபுராவில் உள்ள காமதேனு லேஅவுட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையான குடிநீர் பிரச்சனையில் தற்போதும் சிக்கி தவித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில மாதமாக தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் பொதுமக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூட தண்ணீர் லாரிகளை நம்பி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இது குறித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் பெரும்பாலும் ஐ.டி. நிறுவனத்தில் வேலைப்பார்ப்பவர்கள் வசித்து வருகிறார்கள். சமைப்பதற்கு, குடிப்பதற்கு, குளிப்பதற்கு, துணி துவைக்க என அனைத்து தேவைக்கும் டேங்கர் லாரியை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்க கூடிய நிலை இருக்கிறது. இதனால் தண்ணீர் லாரிகள் வந்தாலும் ஏலம் போட்டு அதிக விலை கொடுப்பவர்களுக்கே தண்ணீர் கொடுத்து செல்கின்றனர். 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ. 1500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாத, மாதம் தண்ணீருக்காக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை செலவு ஆகிறது என்றனர். மேலும் வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தண்ணீருக்காக எங்களது சேமிப்பே கரைகிறது என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இது குறித்து தண்ணீர் டேங்கர் உரிமையாளர் ஒருவர் கூறும் போது, மகாதேவபுரா பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்வதில் பல்வேறு சவால்கள் உள்ளது. இங்கு தண்ணீர் தேவை அதிக அளவில் உள்ளது. மேலும் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்வது எங்களுக்கு கடினமாக உள்ளது. நாங்கள் நியாயமான கட்டணத்தை வசூலிக்கிறோம் என்றார். இது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
காவிரியில் 5-வது கட்ட நீர் திறப்பு பணிகள் நிலுவையில் உள்ளது. எனவே இந்த பணிகள் இன்னும் சில வாரங்களில் முடிவு பெறும். பின்னர் காமதேனு லேஅவுட் மற்றும் 110 கிராமங்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்