search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை பெண் அதிகாரி கைது
    X

    தெலுங்கானாவில் லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை பெண் அதிகாரி கைது

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
    • ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வசந்த இந்திராவிடம் கொடுத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாராயணகுடா துணை வணிகவரித்துறை அதிகாரியாக இருந்தவர் வசந்த இந்திரா.

    இவர் தனி நபரிடம் அவரது நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களில் உள்ள முரண்பாடுகளை கவனிக்காமல் இருப்பதற்காக ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    நேற்று மாலை வணிகவரித்துறை அலுவலகத்திற்குச் சென்ற நபர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வசந்த இந்திராவிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வசந்த இந்திராவை கையும், களவுமாக கைது செய்தனர்.

    பின்னர் வசந்த இந்திராவை ஐதராபாத், நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லஞ்சம் வாங்கியதாக துணை வணிகவரித்துறை பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×