என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காதலனுடன் தப்பி செல்ல முதியவரை எரித்துக்கொன்ற இளம்பெண்.. காதலனுடன் கைது
- காதலனை கரம் பிடிப்பதில் ராமி கேசரியா உறுதியாக இருந்தார்.
- ராமியின் செல்போன், காலணி இருப்பதையும் பார்த்த அவரது குடும்பத்தினர் ராமி தற்கொலை செய்து கொண்டதாக கருதி உள்ளனர்.
ராஜ்கோட்:
குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராமி கேசரியா (வயது27). இவருக்கு ஒரு வாலிபருடன் திருமணமான நிலையில் அவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமி கேசரியா அதே பகுதியை சேர்ந்த அனில் கங்கல் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் காதலனை கரம் பிடிப்பதில் ராமி கேசரியா உறுதியாக இருந்தார். இதனால் இருவரும் ஓடிச்சென்று திருமணம் செய்ய திட்டமிட்டனர்.
ஆனால் தனது குடும்பத்தினர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என அச்சம் அடைந்த ராமி கேசரியா தான் இறந்து விட்டது போல நடிக்க திட்டமிட்டுள்ளார்.
அதற்காக கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி ராமி கேசரியா தனது காதலன் அனில் கங்கலுடன் சேர்ந்து அப்பகுதியில் யாசகம் எடுத்து கொண்டிருந்த அப்பாவி முதியவர் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை தீ வைத்து எரித்துள்ளார்.
மேலும் அவரது உடல் எரிக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு அருகே ராமி தனது செல்போன், காலணி ஆகியவற்றை விட்டு சென்று உள்ளார்.
மறுநாள் எரிந்த நிலையில் உடல் கிடப்பதையும், அங்கு ராமியின் செல்போன், காலணி இருப்பதையும் பார்த்த அவரது குடும்பத்தினர் ராமி தற்கொலை செய்து கொண்டதாக கருதி உள்ளனர்.
அதன் பிறகு ராமியும், அவரது காதலனும் வெளியூர் சென்று வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனாலும் ராமி அப்பாவி முதியவரை கொன்ற குற்ற உணர்ச்சியில் மூழ்கினார்.
இதைத்தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 29-ந்தேதி அவர் வீட்டுக்கு திரும்பி தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை கூறி மன்னிப்பு கேட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமியின் தந்தை, மகளின் மன்னிப்பை ஏற்க மறுத்ததோடு இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து ராமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமி மற்றும் அவரது காதலன் அனில் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
ராமியிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை 3-ந்தேதி இரவு அப்பகுதியில் யாசகம் எடுத்து கொண்டிருந்த ஒருவரை தனது காதலனுடன் சேர்ந்து வேனில் கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.
பின்னர் முதியவரின் உடலை சணல் பையில் அடைத்து கிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர். ஜூலை 5-ந்தேதி அனில் 20 லிட்டர் டீசல் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு வந்து முதியவர் உடல் மீது ஊற்றி எரித்துள்ளார்.
மேலும் ராமி தற்கொலை செய்து கொள்வது போலவே வீடியோ எடுத்து அதனை அவரது தந்தைக்கும் அனுப்பி உள்ளனர். இதனால் இறந்து கிடந்தது தனது மகள் ராமிதான் என அவரது பெற்றோர் கருதி வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
கைது செய்யப்பட்ட ராமி, அவரது காதலன் அனில் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் ராமி கொலை செய்த அப்பாவி முதியவர் யார்? என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்