search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
    • ஊக்குவிப்பு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை முப்படை நலத்துறை மூலம் முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசு களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சட்ட சபையில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் 2022-23-ம் ஆண்டில் 10-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற விக்னேஸ்வரன், பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்ற கீர்த்தனா, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பெற்ற சஸ்மிதாஸ்ரீ, பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்ற ஸ்ரீராம், மருத்துவ படிப்பில் தங்கபதக்கம் பெற்ற விஜயசங்கர், கிக்பாக்சிங்கில் தங்கம் வென்ற மோகன சந்துரு உட்பட தகுதியான 13 பேருக்கு ஊக்குவிப்பு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    விழாவில் முப்படை நலத்துறையின் செயலர் பத்மாஜெஸ்வால், இயக்குனர் சந்திரகுமரன், அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

    • 159 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
    • பணியிடங்களை தேர்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 159 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடந்தது.

    புதுவை கல்வித்துறை வளாகத்திலும், காரைக்கால், மாகி, ஏனாம் கல்வித்துறை அலுவலகங்களிலும் கலந்தாய்வு நடந்தது. ஒரு பள்ளியில் 3 ஆண்டு பணி முடித்தவர்கள் மீண்டும் அதே பள்ளியை தேர்வு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

    இதற்கேற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் பணியிடங்களை தேர்வு செய்தனர்.

    இதற்கான பணிகளை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கனக செட்டிக் குளம் முத்தாலம்மன் நகரில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

    எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவிதொகை மற்றும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் அடையாள அட்டை 200 பயனாளிகளுக்கும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுப்புடன் கூடிய இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் 22 பயனாளிகளுக்கும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    விழாவில் பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனக செட்டிகுளம் மற்றும் பிள்ளை சாவடி ஆகிய கிராமங்களில் இருந்து அனைத்து கிராம பஞ்சாயத் தார்கள், பா.ஜனதா கட்சி பொறுப்பாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
    • கடல்நீர் நிறம் மாறியது சுற்றுச்சூழல் பிரச்சினை.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் 6 முறை கடல்நீர் சிவப்பு நிறமாக மாறியது.

    ரெட் டைட் எனப்படும் நச்சு பாசிப்பூக்கள்தான் இதற்கு காரணம் என செய்திகள் வெளியானது. இதையடுத்து தாமாக முன்வந்து, வழக்குப் பதிந்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் பிரகாஷ்ஸ்ரீவத்சவா, நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதன்பின் அவர்கள் அளித்த உத்தர வில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கடல்நீர் சிவப்பு நிறமாக மாறியதற்கு கடல்டைனோப்ளோ ஜெல்லட்டுகளின் நோக்டிலூக்கா இனத்தில் சிவப்பு நிறமிகளால் கடல்நீர் மாறியிருக்கலாம் என தெரிவித்தார். தொழிற்சாலை மாசுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை. கடல்நீர் நிறம் மாறியது சுற்றுச்சூழல் பிரச்சினை.

    எனவே இதுகுறித்து ஆராய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், புதுவை வாரிய செயலர், புதுவை பல்கலைக்கழக கடல் உயிரியல் துறை தலைவர், பரங்கிப்பேட்டை கடல் உயிரியல் ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

    இந்த குழு மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, சிவப்பு நிறமாக மாறிய காரணத்தை கண்டறிந்து 2 மாதத்தில் சென்னையில் உள்ள தென்மண்டல அமர்வில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை தென் மண்டல அமர்வில் வருகிற ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளனர்.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வெள்ளிவிழா ஆண்டு
    • தேசிய அளவிலான ஹேக் எலைட் எனும் ஹக்கதான் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மதகடிபட்டில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் ஏ.ஐ.சி.டி.ஈ. ஐடியா லேப் இணைந்து தேசிய அளவிலான ஹேக் எலைட் எனும் ஹக்கதான் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நாடு முழுவதிலிருந்து 29 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை சார்ந்த 98 மாணவர் குழு அடங்கிய 417 மாணவர்கள் பங்கேற்றனர். தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடா சலபதி, கல்லூரியின் டீன் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன், தேர்வுக்கட்டுபாட்டாளர் ஜெயக்குமார், வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    • சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
    • கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கடை களை காலி செய்து, வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் சுற்றுச்சுவரை ஒட்டி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலில் முல்லை நகர், பெரியார் நகர், ஜே.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் வடிந்து செல்லும். மூடப்பட்ட இந்த வாய்க்காலின் மீது சுதேசி மில் சுவரை ஒட்டி கடைகள் அமைத்திருந்தனர்.

    இதனால் ஆண்டுக் கணக்கில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாலும் இருந்தது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கடை களை காலி செய்து, வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடங்கினர்.

    வாய்க்காலை மூடியிருந்த சிலாப்புகள் கடலூர் சாலை சந்திப்பிலிருந்து உருளை யன்பேட்டை போலீஸ் நிலையம் வரை அகற்றப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலில் கட்டுமா னப்பணிக்கு கான்கிரீட் அமைக்க கம்பிகள் கட்டும் பணி நடந்து வந்தது. திடீரென இந்த பணி நிறுத்தப்பட்டது. மாதக்க ணக்காகியும் இந்த பணி மீண்டும் தொடங்கவில்லை.

    அங்கிருந்து இரும்பு கம்பிகளை இரவு நேரங்களில் பலர் திருடி செல்கின்றனர்.

    அதேநேரத்தில் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அதில் குப்பை, கூளங்கள் சரிந்து தண்ணீர் தேங்க தொடங்கி யது. மழை நேரத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி உட்புற சாலைகளில் கழிவுநீர் செல்ல தொடங்கி யது. சமீபகாலமாக டெங்கு, மலேரியா, வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. பிரதான சாலையில் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த சாலையில் நாள்மு ழுவதும் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது. அதோடு அங்கு கடை வைத்தி ருந்தவர்கள் நீண்டகாலமாக காத்திருந்தும் பணிகள் முடியாததால் அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் வேதனை அடைந்து வருகின்ற னர். வாய்க்கால் கட்ட பணி க்காக அமைக்கப்பட்ட கம்பி கள் துருப்பிடித்து வருகிறது. திறந்து கிடக்கும் கால்வாயால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு ள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    மீன்வள ஆராய்ச்சி குழுவினர் மீனவர்களுடன் ஆலோசனை

    புதுச்சேரி:

    இந்திய கடல் வளத்தை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமும் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் மீன்வளத்தை பெருக்க மத்திய அரசு முடிவெடுத்து திட்டங்களை வகுத்து வருகிறது.

    பவளப்பாறைகள்

    பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்கால் கடலோர பகுதியில் மீன்வளத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மீன்வளத்தை பெருக்கும் வகையில் முதல்கட்டமாக 14 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் ரூ.4 கோடியே 34 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் கடலோர பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவ உரிய இடங்களை ஆய்வு செய்து கண்டறிய உள்ளனர்.

    மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவன நிபுணர் குழு வரும் 30-ந் தேதி வரை புதுவையிலும், டிசம்பர் 1, 2-ந் தேதிகளில் காரைக்கால் பகுதிகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறது. மேலும் இந்த ஆய்வுக்குழுவினர் மீனவ கிராம மக்களிடையே ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி செயற்கை பவளப்பாறைகள் நிறுவ சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய இடங்களை தேர்வு செய்ய உள்ளது.

    ஆலோசனை

    செயற்கை பவளப்பாறை களை மீன்கள் மறைவிடமாக பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்வதால் மீன்வளம் பெருகும்.

    மத்திய மீன்வள ஆராயச்சி நிறுவன விஞ்ஞானி ஜோ கீழக்கூடன் தலைமையிலான குழுவினர் இன்று காலை கனகசெட்டிகுளம், பெரியகாலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி பகுதியில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில், அந்தந்த பகுதி மீனவ பஞ்சாயத்தார், மீனவர் கூட்டுறவு சங்கத்தினர், மீன்பிடி படகு உரிமையாளர்கள், மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து இன்று மதியம் இந்த பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை சோலைநகர், வைத்திக்கப்பம், குருசுகுப்பம் பகுதி மீனவ பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தி மாலையில் கள ஆய்வு செய்கின்றனர்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) வம்பாகீரப்பாளையம், பெரியவீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினத்திலும், 30ம் தேதி புதுக்குப்பம், நல்லவாடு, நரம்பை, பனித்திட்டு பகுதியிலும் காலையில் மீனவ பஞ்சாயத்தாருடன் கலந்தாய்வு நடத்தி, மாலையில் கள ஆய்வு நடத்துகின்றனர்.

    அதன்பின் நிபுணர்குழு காரைக்கால் சென்று மீனவர்களோடு கலந்தாய்வு, கள ஆய்வு நடத்துகிறது.

    • கேரள பிரமுகர் தப்பியோட்டம்
    • சேட்டா விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிலோ கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முதலியார்பேட்டை அனிதாநகர் பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக 2 கார்கள் நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தது. இதனால் அந்த காரை போலீசார் கண்காணித்தனர்.

    சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரின் அருகில் சென்றனர். அப்போது காரில் இருந்தவர்கள் ஒரு பொட்டலத்தை அவர்களி டம் கொடுத்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் காரில் இருந்த வர்கள் ஓடத் தொடங்கினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். இதில் 7 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

    இதனையடுத்து காரில் போலீசார் நடத்திய சோதனையில் 45 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.

    தொடர்ந்து பிடிபட்ட வர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 25) ஷாருக்கான் (25) ராஜூவ்காந்தி (28) அப்துல்கலாம் (19), மனோஜ்குமார் (22), புதுவை நைனார்மண்டபம் துளுக்கானத்தம்மன் வீதியை சேர்ந்த செந்தில்குமார் ( 23) நைனார்மண்டபம் பாண்டியன் வீதியை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக் சாண்டர் (34) என்பது தெரிய வந்தது.

    தப்பியோடியவர் கேரளாவை சேர்ந்த சேட்டா என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 கார், மோட்டார் சைக்கிள், 7 செல்போன் மற்றும் 45 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய கேரளாவை சேர்ந்த சேட்டா என்பவர் கஞ்சாவை மொத்தமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வந்து தமிழகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது கூட்டாளிகளுடன் விற்று வந்துள்ளார்.

    சேட்டாவுடன் விழுப்புரம் அசாருதீனுக்கு பழக்கம் இருந்துள்ளது. இதனால் சேட்டா மூலம் அசாருதீன் கஞ்சாவை வாங்கி வந்து அதனை புதுவையை சேர்ந்த அலெக்ஸ், செந்தில்குமார் ஆகியோரிடம் கொடுத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இதனிடையே, சேட்டா விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிலோ கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்துள்ளார். அதில் 5 கிலோ வை சென்னையில் கொடுத்துள்ளார். புதுவையில் உள்ள அலெக்ஸ் 2 கிலோ கஞ்சா கேட்டதால் காரில் கொடுக்க வந்துள்ளார்.

    அவருடன் காரில் விழுப்புரத்தை சேர்ந்த மற்றவர்களும் வந்துள்ளனர். இவர்கள் புதுவையில் கஞ்சாவை கொடுத்துவிட்டு, திண்டிவனம், கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு கொடுத்துவிட்டு, இறுதியில் திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அதற்குள் போலீசில் சிக்கி கொண்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மொத்த வியாபாரியான சேட்டாவை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. கோரிக்கை
    • மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டதினம் கொண்டாப் பட்டது. அரியாங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வரவேற்றார். பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான அருள் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் மக்கள் தேவை கள் பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் பேசினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-

    டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த, மறைந்த 5 இடங்கள் பஞ்ச தீர்த்த ஸ்தலங்கலாக அறிவித்து மிகப்பெரிய அளவில் புனரமைக்கப்பட்டு மக்களுக்கு அவருடைய வரலாறுகளை தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளனர். இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகையில், அம்பேத்கர் வாழ்ந்த இடங்களுக்கு மக்கள் சென்று பார்வை யிட்டு வருவதற்காக அரசு செலவிலேயே நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இதற்காக அவருக்கு பா. ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதற்கான அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, பட்டியல் அணியின் மூத்த துணை தலைவர்கள் கஜேந்திரன், சுப்பிரமணி பொதுச்செய லாளர் நாகராஜ், பொருளா ளர் டாக்டர் சிவபெருமான் மாநில செயலாளர் பிரகாஷ், அய்யப்பன் அருண், செயற்குழு உறுப்பி னர்கள் காமாட்சி, தட்சிணா மூர்த்தி ராஜாராம், நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜ குரு அம்பேத்கர், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ண ரசன் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள் குமார், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளர் வசந்த் ராஜ், பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து, முருகவேல் மாவட்ட மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருபுவனை பாளையம் பகுதியில் பெருமாள் நகர், ஜெயா நகர், வெங்கடா நகர் உட்புற விரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கருங்கல் ஜல்லி சாலை அமைக்க மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து 45 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

    அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடை பெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    சாலை வசதி போடுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பொதுமக்களிடம் ஆணையர் கூறினர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் 20 வருடங்களுக்கு முன்பு எஸ்.பி.ஆர். நகர், தங்கராஜ் நகர் உள்ளிட்ட மனை பிரிவுகள் உருவானது. இங்கு பலர் வீடு கட்டி குடியேறினர். ஆனால் இதனால் வரை அப்பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அப் பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு அப்பகுதிக்கு சாலை வசதி போடுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பொதுமக்களிடம் ஆணையர் கூறினர்.

    இதன் மீது இதனால் வரை எந்தெந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், தொகுதி எம்.எல்.ஏ.விடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையேற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தமிழ்சங்க நிறுவனர் மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்டு பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ் சங்கத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள் மற்றும் தமிழ்சங்க நிறுவனர் மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

    விழாவில் நாடக வியலாளர் பேராசிரியர் பார்த்திபராஜா சாமீ என்ற நூலை வெளியிட்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளர் அருள்செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கோ.பாரதி, எம்.எஸ்.ராஜா, கலியபெருமாள், மண்ணாங்கட்டி, சரஸ்வதி வைத்தியநாதன், ராஜஸ்ரீமகேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×