search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் பரிசு வழங்கினார்
    • சமூக சேவகருமான சத்தியராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கவுன்சிலரும் சமூக சேவகருமான சத்தியராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் சில்வர் வாட்டர் பாட்டில் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி, திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி மற்றும் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ெகன்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • உப்பளம் சுப்பையா சாலை, காந்தி வீதி மற்றும் ஆம் பூர் சாலைகளை மேம் படுத்தும் பணி தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் சுப்பையா சாலை, மகாத்மாகாந்தி வீதியில் புஸ்ஸி வீதி முதல் சுப் பையா சாலை வரை மற்றும் நகர பகுதிக்குட் பட்ட, 22.675 கி.மீ நீளமுள்ள தார் சாலைகள் ரூ.10.83 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் உப்பளம் சுப்பையா சாலை, காந்தி வீதி மற்றும் ஆம் பூர் சாலைகளை மேம் படுத்தும் பணி தொடக்க விழா நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் செல்வம், வீர கட்டடங் கள் மற்றும் சாலை கள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் திருஞானம், உதவிப் பொறியாளர் பன்னீர், இளநிலைப்பொறியாளர் வேல்முருகன் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு இளமைப் பருவப் பிரச்சினைகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளியின் தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மாணவர் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இளமைப் பருவப் பிரச்சினைகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குழந்தை மருத்துவரும் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மூத்த பேராசிரியருமான டாக்டர்.சிவப்பிரகாசம் கலந்து கொண்டு 11 வயது முதல் 19 வயது வரை உள்ள இளமைப் பருவ பிரச்சனைகளையும் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் பற்றியும் விளக்க படத்தோடு மாணவர்களுக்கு எடுத்துக் கூறி எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினார். 

    • அகில இந்திய சமுதாய மருத்துவத்துறை புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கம் கல்லுாரி அரங்கில் நடந்தது.
    • ஜிப்மர் மனநல மருத் துவர் பாலாஜி போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தொற்றா நோய், அதனால் ஏற்படும் மனநல பிரச்சினை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    புதுச்சேரி:

    கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் அகில இந்திய சமுதாய மருத்துவத்துறை புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கம் கல்லுாரி அரங்கில் நடந்தது.

    கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். துறை தலை வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். டெல்லி எக்கோ இந்தியா அமைப்பின் பேராசிரியர் சந்தீப் பல்லா சிறப்புரையாற்றி ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதனை அனில் பூர்த்தி பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து இருதய நிபுணர் மார்க் மாரடைப்பு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித் தும், ஜிப்மர் மனநல மருத் துவர் பாலாஜி போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தொற்றா நோய், அதனால் ஏற்படும் மனநல பிரச்சினை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    காணொலி மூலம் டாட்டா மெமோரியல் மருத்துவ பேராசிரியர் சுபிதா பாட்டீல்,புற்று நோய் ஆரம்ப நிலை குறித்தும் சிகிச்சைக்கான பொது மக்களுக்கு விழிப்புணர்வு குறித்த விபரங்களை கூறி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    கருத்தரங்கில் பிம்ஸ் மருத்துவ சமுதாய டாக்டர் ஸ்டாலின் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

    • குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
    • கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதில் புதுச்சேரியில் என்ஜினீயர், டாக்டர் என நன்கு படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 10 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ.8.25 லட்சத்தை இழந்துள்ளனர். வில்லியனுார் பெண் ஒருவர், குறைந்த விலையில் துணிகள் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி அரியாங்குப்பம் பெண் ரூ. 90 ஆயிரத்தையும், முதலியார்பேட்டை பெண் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

    வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்த சின்ன காலாப்பட்டு வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஸ்பைஸ் ஜெட் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பேசுவதாக கூறி வேலை உறுதியாகி விட்டது. சில கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.

    குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

    சாரத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், கே.ஓய்.சி.யை அப்டேட் செய்வதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 அபேஸ் செய்து உள்ளார்.

    லாஸ்பேட்டை வாலிபருக்கு, கிரெடிட் கார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்கை ஓபன் செய்து வங்கி தகவலை பதிவிட்ட அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 24 ஆயிரம் அபேஸ் ஆனது. காமராஜர் சாலையைச் சேர்ந்த பெண்ணிடம், மர்மநபர் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், டெலிவரி ஆகாத பொருள் குறித்து அறிய அவர் அனுப்பிய மொபைல் அப்ளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து, தகவல் பதிவிட்டதும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் திருடப்பட்டது.

    வி.மணவெளியை சேர்ந்தவர் வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, தாய்லாந்து சுற்றுலா செல்ல தொடர்பு கொண்டுள்ளார். விமான டிக்கெட், ரூம் புக்கிங் செய்ய ரூ. 3 லட்சம் வங்கி கணக்கில் செலுத்திய பின்பு மர்மநபர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதேபோன்று, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    இதுதொடர்பான புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • ஒரு எம்.எல்.டி. குடிநீர் திட்ட பிளாண்ட்அமைக்க ரூ.8 கோடி தேவை.

    புதுச்சேரி:

    புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    இதன்படி சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைப்பதற்கான இடம், பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

    புதுவை நகர பகுதிக்கு ஒரு நாளைக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. ஒரு எம்.எல்.டி. குடிநீர் திட்ட பிளாண்ட்அமைக்க ரூ.8 கோடி தேவை. 100

    எம்.எல்.டி. குடிநீர் பிளான்ட் அமைக்க ரூ.800 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டது. இதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து விளக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:-

    புதுவை எதிர்காலத்தில் நிலத்தடி நீரை மட்டும் சார்ந்திருக்க முடியாது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. முதல் கட்டமாக 40 எம்.எல்.டி. அளவு கடல்நீரை குடி நீராக்கும் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆசிரியர் பணிக்கு நேரடி தேர்வு அறிவித்துள்ளது
    • பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு நேரடி தேர்வு அறிவித்துள்ளது. இந்த நேரடி தேர்வில் வயது வரம்பு தளர்வு அளிக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் மற்றும் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நேரடி நியமனத்தில் வயது வரம்பு தளர்வு கோரி கல்வித்துறை முன்பு பகோடா சுட்டு விற்கும்போராட்டம் நடத்தப்பட்டது.

    போராட்டத்துக்கு பிராங்கிளின் பிரான்சுவா தலைமை வகித்தார். சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம், தமிழர்களம் அழகர் முன்னிலை வகித்தனர். கலியபெருமாள், ஜெகநாதன், பிரகாஷ், தீனா உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடுப்பு வைத்து பகோடா சுட்டு அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்து நூதன போராட்டம் நடத்தினர்.

    • மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.
    • அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.

    புதுச்சேரி:

    பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.

    மகான் அரவிந்தரின் யோக முறைகள் கவர்ந்ததால் இந்தியாவுக்கு வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுவையிலேயே தங்கி அவரின் ஆன்மிக பணிகளுக்கு துணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.

    அன்னை 1973-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி மகா சமாதியடைந்தார். அன்னையின் 50-ம் ஆண்டு மகா சமாதி தினம் இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்டது.

    இதனையொட்டி இன்று காலையில் கூட்டு தியானம் நடந்தது. காலை 6 முதல் மதியம் 12 மணி வரை அன்னை வாழ்ந்த அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.

    பல நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அன்னை சமாதியை தரிசனம் செய்தனர்.

    • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    • காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான்றோன்றித்தனமாக செயல்பட்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் யுவராஜ் என்ற மற்றொரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவருக்கு 17 வயதுகூட பூர்த்தியாகவில்லை. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என சட்டம் உள்ளது.

    இதுகுறித்து மருந்து தொழிற்சாலை உரிய விளக்கம் தர வேண்டும். ஆளும் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொழிற்சாலை தவறுகளை மூடிமறைத்து அவர்களை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவது வேதனை தருகிறது.

    காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான்றோன்றித்தனமாக செயல்பட்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். சீனியர் எஸ்.பி, டி.ஜி.பி. ஆகியோர் காலாப்பட்டு போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

    உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு அதிகபட்சமான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். மேலும் சிலர் உயிரிழக்கும் தருவாயில் உள்ள நிலையிலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?

    பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என கவர்னரிடம் கேட்டுள்ளோம். தனியார் தொழிற்சாலை விபத்து, நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஒட்டு மொத்தமாக விபத்து ஏற்பட்ட முதல் தற்போதைய நிலை வரை ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரியாங்குப்பம் கொம்யூனில் அதிகாரிகள் ஆலோசனை
    • ஆயுஷ்மான் பாரத திட்டம் உள்ளிட்ட 17 வகையான திட்டத்தை விளக்கும் விதமாக அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா என்ற தலைப்பில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் அதன் பயன்பாட்டை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக வருகிற 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துக்கு, மத்திய அரசின் நல திட்ட விளக்க பிரசார வாகனம் வருகிறது.

    அதனை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கொண்டு வந்த குடிநீர் வழங்கும் திட்டம், எரிவாயு திட்டம், ஆயுஷ்மான் பாரத திட்டம் உள்ளிட்ட 17 வகையான திட்டத்தை விளக்கும் விதமாக அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மண்டல அதிகாரி மற்றும் உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரி ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், நோடல் அதிகாரிகள், செயலாக்க அதிகாரிகள் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம், நலவழித் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, வருவாய்த்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை ஊழியர்கள், இந்தியன் வங்கி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்ட மற்ற துறை சார்ந்த ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்பட்டது.

    • புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு குழந்தை களை வாழ்த்தி பேசினார்.
    • ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் பண்டிதர் ஜவர்கலால் நேரு பிறந்தநாளை குழந்தைகள் தின விழாவாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு குழந்தை களை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி ஆசிரியர்களின் நடனம், நாடகம், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் கண்டு களித்தனர். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோ லியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
    • புதுவையில் பெறப்படும் கையெழுத்துகள் தமிழக தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி புதுவை மாநில தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகள் இணைந்து ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கினர்.

     தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். எதிர்கட்சித் தலைவர் சிவா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    மாநில துணை அமைப்பாளர் கென்னடி எம்.எல்.ஏ, பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ, மாநில துணை அமைப்பாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குமரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், வேலவன், தொகுதி செயலாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

    புதுவை பிராந்தியத்தில் 234 தொகுதியிலும் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. புதுவையில் பெறப்படும் கையெழுத்துகள் தமிழக தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ×