search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சுதந்திர தின விழாவில் புதுவை மாநில விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதன்படி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த உயர்வு இந்த நவம்பர் மாதம் முதல் நடை முறைப்படு த்தப்படுகிறது. இதன்மூலம் புதுச்சேரியில் 939 பேர் காரைக்காலில் 174 பேர் மாகேவில் 87 பேர், ஏனாம் பகுதியில் ஒருவர் என மொத்தம் ஆயிரத்து 201 விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

    மாதாந்திர உதவித்தொகை உயர்த்த ப்படுவது தொடர்பாக புதுவை மாநில விடுதலைப் போராட்ட தியாகிகள் மாதாந்திர உதவித் தொகை விதிகள், 1970-ல் திருத்தம் மேற்கொள்ளவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    • பிரசாந்த்குமார் மனைவியின் சேலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாந்த்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் சிக்மா செக்யூரிட்டி பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏ.எஸ்.ஐ) பிரசாந்த்குமார் (50) பணியாற்றி வந்தார்.

    இவர் மேரி உழவர்கரையில் வைரம் நகர் 3-வது குறுக்குத்தெருவில் வசித்து வந்தார். இவரின் மகளுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்து மகள் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரசாந்த்குமார் நேற்று இரவு தனது மனைவியின் சேலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் இதைப்பார்த்த அவரின் மனைவி மேரிகிளேர் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாந்த்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது.
    • பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியின்றி அரசயில்கட்சியினரால் பேனர்கள் வைக்கப்படுகிறது.

    முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.

    அதில், எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.

    மேலும் பேனர் வைத்த அமைப்பின் நிறுவனர் அசோக்ராஜ் உட்பட நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபோல் பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், ஆதரவற்ற, தெருவோர செல்ல பிராணிகளை மீட்டு வளர்த்து வருகிறோம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களை காப்பாற்றியுள்ளோம். நோணாங்குப்பத்தில் 4 ஆண்டுக்கு முன் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நாய்க்கு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம்.

    கலெக்டர், புதுவையில் பேனர் வைக்க தடையில்லை என கூறியுள்ளதால் ராஜீவ்காந்தி சிக்னலில் யாருக்கும் பாதிப்பின்றி பேனர் வைத்தோம். ஆனால் நாய்க்கு பேனர் வைக்கக் கூடாது என போலீசார் அகற்றிவிட்டனர் என்றார்.

    ராஜீவ்காந்தி சிக்னலில் பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.
    • எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லையில் தமிழகம் மற்றும் புதுவை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

    ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.கருவடிக் குப்பம் மற்றும் இடையஞ் சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் லாஸ்பேட்டை மற்றும் ஆரோவில் போலீ சார் 50-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இவர்கள் கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை பகுதி, சாமிபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.

    மேலும் வெடி பொருள், கத்தி போன்ற ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என சோதனையிட்டனர். ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்களிடம் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்து கொள்ள எச்சரித்தனர்.

    இதே போன்ற சோதனை புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி வெடிமருந்து பதுக்கி வைத்தல், குற்ற நடவடிக்கைக்கு திட்டமிடுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த சோதனையை 3 மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

    • பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்தது.

    இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் அறிவுறுத்தி உள்ளது.

    • 10 ஆண்டு பணி முடிந்தவர்களை நிரந்தரம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
    • மேம்பாட்டுக்கழகம் மூலம் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆதிதிராவிடர் நற்பணி இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர் உரிமை சங்கம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகறை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் மாயவன் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நற்பணி இயக்க செயலாளர் வீரசெல்வம் முன்னிலை வகித்தார்.

    தீண்டாமை ஒழிப்பு முன்னணி கொளஞ்சியப்பன், சரவணன், உமாசாந்தி, விவசாய தொழிலாளர் சங்கம் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும். பாகூர்பேட் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். நலத்துறையில் 17 ஆண்டாக பணிபுரியும் 67 தினக்கூலி சமையல் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடிந்தவர்களை நிரந்தரம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

     நலத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பெண்களை இடமாற்றம் செய்யக்கூடாது.

    இலவச கல்விக்கான முழு கட்டணத்தையும் பள்ளி, கல்லூரி தொடங்கிய 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும். கல்வி உதவி த்தொகை பெற ஆன்லைன் முறையை கைவிட வேண்டும். மேம்பாட்டுக்கழகம் மூலம் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும்.

    காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    • காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
    • இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்த தானம் முகாம் நடந்தது.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ரத்ததான முகாமுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.

    புதுவை மாநில பொறுப்பாளர் ஜோஸ்வா ஜெராட், முன்னிலை வகித்தார்.

    முகாமை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், மாநில பொதுச்செயலாளர்கள் திருமுருகன், சந்திரிகா, இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், சுந்தர், அயலக பிரிவு தலைவர் பரந்தாமன்,

    இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் தமிழரசன்,மாநில பொதுச் செயலாளர், சத்ய நாராயணன், செயலா ளர்கள், வினோத், சித்தானந்தம், உதயா, மனோஜ், அத்வானி, மாவட்ட தலைவர்கள், பிரகாஷ், அய்யப்பன், கார்த்திகேயன், அஷ்ரப் அலி, தொகுதி தலைவர்கள், ராஜேஷ், சுரேஷ் ராஜ், சரத் பாபு, கண்ணன், வீர மணிகண்டன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா,மற்றும் இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
    • களையப்பட வேண்டும் என்றால் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் ஓரணியில் நின்று கடுமையாக உழைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு தொகுதி திமுக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் லெனின் வீதி தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    தொகுதி அவைத்தலைவர் பாணுகணேசன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் நடராஜன், வேலவன் வரவேற்றனர்.

    கூட்டத்தில் தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது:-

    தேசிய கட்சிகள் புதுவையை ஒரு சொர்க்க பூமியாகத்தான் பார்க்கிறதே தவிர அதற்கான அங்கீகாரத்தை தர மறுக்கிறது. பாஜகவின் ஆளுமையால் புதுவையில் முதல்- அமைச்சருக்கான அதிகாரம் பறிபோய்விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், அரசுக்கும் மரியாதை இல்லை.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் எண்ணத்தை ஆட்சியாளர்கள் சிதைத்துள்ளனர்.

    புதுவையில் மூடிக்கிடக்கின்ற ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், மூடப்பட்டுள்ள மில்களை திறக்க வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். இதைப்பற்றி கவலைப்படாத ஆட்சி புதுவையில் நடக்கிறது. இவையெல்லாம் களையப்பட வேண்டும் என்றால் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் ஓரணியில் நின்று கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

    இதில், நிர்வாகிகள் தொமுச மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருண், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கிருபாசங்கர், சந்துரு, உள்ளிட்டோர் பங்கேற்றனர் 

    • போலீஸ் சூப்பிரண்டிடம் வக்கீல் சசிபாலன் மனு
    • நெடுஞ்சாலையில் இரு பிரிவுகளாக பிரிக்கும் நடுப்பகுதியில் சரியான முறையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை தொகுதி சமூக சேவகர் வக்கீல் சசிபாலன் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாற னிடம் இன்று மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திராகாந்தி சிக்னல் முதல் மூலகுளம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேலை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிபடுகின்றனர். ேமலும் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது.

    நெடுஞ்சாலையில் இரு பிரிவுகளாக பிரிக்கும் நடுப்பகுதியில் சரியான முறையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

    தடுப்புக்கட்டையில் இரவில் ஒளிரும் குறியீடும் அமைக்கப்படாமல் உள்ளது. இதேபோல் பூமியா ன்பேட்டை முதல் அரும்பா ர்த்தபுரம் மேம்பாலம் வரை வேலை நாட்களில் காலை மற்றும் மாலையில் போக்கு வரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேலையில் முக்கிய சந்திப்புகளில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை
    • கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவதும் தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், ஒரு எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர்கள் மீதும் 12 ஆண்டுக்கு முன் நடந்ததாகக்கூறி ராஜஸ்தான் முதல்-மந்திரி மகன் மீது அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது.

    ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எதிர்கட்சி தலைவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

    உச்சகட்டமாக புதுடெல்லி முதல்-மந்திரி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் ஊழலில் சிக்கியுள்ள பா.ஜனதா முதல்-அமைச்சராக இருந்த பொம்மை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசாம் முதல்-மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு தாக்கல் செய்தது.

    அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததும் வழக்கு மூடி மறைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 750 சி.பி.ஐ. வழக்குகள்தான் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் 5 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முடிவுக்கு வந்தது 6 வழக்குகள் மட்டும்தான்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். அவரின் வேஷம் கலைந்துவிட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா எப்படி வழக்கு போட்டார்களா?

    அவை அனைத்தும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அம்பலத்துக்கு வருகிற 2024-ல் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது மோடி ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு அதானி, பிரதமர் மோடி, புதுவையில் உள்ள அமைச்சர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்.

    தமிழக கவர்னர் ரவி அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறார்.

    மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.

    தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயக மரபுக்கும் எதிரானது. தமிழக தி.மு.க. கூட்டணி ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படும் கவர்னரின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது.

    கவர்னர் ரவியின் செயல்பாடு தமிழ்நாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது. இதனால் பாதிக்கப்போவது பா.ஜனதாவும், கவர்னர் ரவியும்தான். இண்டியா கூட்டணிக்கோ, தமிழக முதலமைச்சருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    2024 தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறுவோம்.

    மோடிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் கவர்னர் ரவியை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்கவே கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாலிபர் கைது
    • திலாசுப் பேட்டையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணிடம் அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் தட்டாஞ்சாவடியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்துள்ளார். அப்போது திலாசுப் பேட்டையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணிடம் அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்தார்.

    இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டார். அவர்களும் சிவக்குமாரை அழைத்து கண்டித்தனர்.

    இதற்கிடையே அந்த பெண் பெட்ரோல் நிலைய வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதனை தொடர்ந்து அந்த பெண் காய்கறி கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

    இதனை அறிந்து கொண்ட சிவக்குமார் 4 நாட்களுக்கு முன்பு காய்கறி கடை முன்பு நின்றுக்கொண்டு சைகை காட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் மீண்டும் முறையிட்டார். திருமணம் நிச்சயிக்கப்ப ட்டுள்ளதால் சிவக்குமாரிடம் எந்த பிரச்சி னையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என பெற்றோ ர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இந்நிலையில், மது போதையில் காய்கறி கடைக்குள் நுழைந்த சிவக்குமார் என்னை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால், உன்னையும், உன்னை திருமணம் செய்து கொள்பவனையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி விட்டு சென்றார்.

    இதனால் பயந்து போன அந்த பெண் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனைத் தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தால் குப்பம் ரமணா நகர் மற்றும் திருபுவனை பகுதியில் உள்ள செல்வ கணபதி நகர், ராம கிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளில் தார்சாலை இன்றி மழை நீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

    இந்நிலையில் தார் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனை ஏற்று மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து தார் சாலை அமைக்க ரூ. 50 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜையை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×