search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆதித்யா பள்ளி குழும சேர்மனும், குராஷ் தற்காப்புக்கலை சங்க தலை வருமான அசோக்ஆனந்தன் தலைமை வகித்தார்.
    • ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில குராஷ் தற்காப்புக்கலை சங்கம் சார்பில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான குராஷ் தற்காப்புக்கலை சாம் பியன்ஷிப் போட்டிகள் பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது.

    பள்ளியின் தலைமை உடல்கல்வி ஆசிரியர் அமீது படேல் வரவேற்றார். ஆதித்யா பள்ளி குழும சேர்மனும், குராஷ் தற்காப்புக்கலை சங்க தலை வருமான அசோக்ஆனந்தன் தலைமை வகித்தார்.

    குராஷ் தற்காப்புக்கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆரோவில் இசையம்பலம் பள்ளி முதல்வர் சஞ்சீவ் ரங்க நாதன், புதுவை பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் இளைய நம்பி, புதுவை பல்கலைக்கழக முன்னாள் சீனியர் ஆடிட்டர் குண சேகரன், ஜூடோ சங்க முன்னாள் தலைவர் பிரதீப்குமார் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் புதுவை மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த குராஷ் தற்காப்புக்கலை பயின்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு குராஷ் சங்க தலைவர் அசோக்ஆனந்தன் மற்றும் சங்க நிர்வாகிகள் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.

    • சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்
    • பண்டிகை கால உதவி தொகையாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புதுவை சி.ஐ.டி.யூ. மாநில குழு சார்பில் கடந்த 17-ந் தேதி ஆயிரக்க ணக்கான தொழிலா ளர்களை திரட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேரணி நடத்தியது.

    இதில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பண்டிகை கால உதவி தொகையாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுவை அரசு இந்த கோரிக்கையின் மீது எந்த விதமான முடிவும் எடுக்கா மல் காலதாமதம் செய்வது கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து உழைப்பாளி மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் அதை கொண்டாட உதவித்தொகை காலத்தோடு கிடைத்தால்தான் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும். இது குறித்து முதல்-அமைச்சர் விரைவில் நட வடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும்.

    கூப்பன் வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் அவர்கள் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய்குமார் பழக் கடை யில் வேலை செய்யும் ஒருவருக்கும் மணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடங்காத மணி, வெங்க டேசன் ஆகியோர் சாலையில் கிடந்த 2 காலி மதுபாட்டிலில் பெட்ரோல், மண்எண்ணெய் கலந்து திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் எரிந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்திட்டு செல்வாநகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார் (வயது23). பழக்கடை வைத்துள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த வர் மணி என்ற கியா மணி (வயது 21), இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய்குமார் பழக் கடை யில் வேலை செய்யும் ஒருவருக்கும் மணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து அறிந்த சஞ்சய்குமார், மணியை அழைத்து, என் கடையில் வேலை செய்பவனிடம் நீ எப்படி தகராறு செய்யலாம் என கேட்டு கையால் தலையில் தாக்கினார். இது மணிக்கு பெருத்த அவமானமாகி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனிடையே கஞ்சா வழக்கில் கைதாகி மணி சிறைக்கு சென்று வெளியில் வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் தனது நண்பரான அரியாங்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற வெங்காயம் ( 21) என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

    அப்போது தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து வெங்காய வெங்கடேசனிடம் கூறியுள்ளார். உடனே வெங்கடேசன், மணியை அழைத்து சென்று சஞ்சய்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில்  10.45 மணியளவில் வியாபாரம் முடித்துவிட்டு சஞ்சய்குமார் வீட்டிற்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் ஆத்திரம் அடங்காத மணி, வெங்க டேசன் ஆகியோர் சாலையில் கிடந்த 2 காலி மதுபாட்டிலில் பெட்ரோல், மண்எண்ணெய் கலந்து திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் எரிந்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக, திரி வெளியில் விழுந்த தால், பெட்ரோல் நிரம்பிய மதுபாட்டில்கள் மட்டும் வீட்டு சுவற்றில் விழுந்தது.

    இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சத்தம் கேட்டு வெளியில் வந்த சஞ்சய்குமார் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தி.மு.க. கண்டனம்
    • அணிவகுப்பை ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுவை மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஊட்டியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் சிதைக்க பாடுபடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் புதுவையில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சபாநாயகர் கலந்து கொண்டது மரபு களை மீறும் செயலாகும்.

    சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் போதித்த காந்தியடிகள், வள்ளலார், அம்பேத்கார் பெயரில் புதுவை மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.

    2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுவை மண்ணில் நடத்தி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஊட்டியுள்ளனர்.

    புதுவை மக்களின் கலாச்சாரத்திற்கும், பன்முகத்தன்மை க்கும் துளியும் ஒவ்வாத ஒரு ஊர்வலத்துக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்துள்ளார். ராஜ்யசபா எம்.பி. செல்வ கணபதி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

    ஊர்வலத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், பா.ஜனதா

    எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரபுகளையும் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கே எதிரானதாகும்.

    இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்க ளுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஊர்வலமாக சென்றனர்
    • பாப்ஸ்கோ ஊழியர் நலச்சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    புதுச்சேரி:

    பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்த வலியுறுத்தியும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை கேட்டும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கொட்டும் மழையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் நலச்சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, மாநிலசெயலாளர்கள் முத்துராமன், துரை செல்வம், தயாளன், பாப்ஸ்கோ ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி,பத்மநாபன், ரவி, ஏழுமலை, முருகவேல், வேலு, பாலமுருகன், கமிட்டி உறுப்பினர்கள் ஜீவரத்தினம், ராஜூ, விசுவநாதன், குமரகுரு, அமுதா, அம்சவல்லி, நக்கீரன், சத்தியசீலன், ஊழியர்கள் கோவர்தன், குணா, கெஜவரதன், நாராயணன், பாலச்சந்தர், பார்த்திபன், செந்தில், சௌந்தர்ராஜன், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் அடைக்கலராஜ், பாலா சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சட்டசபை அருகே வந்தது. அவர்களை போலீசார் ஆம்பூர்சாலையில் தடுத்து நிறுத்தினர்.

    அங்கு பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்த வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அணிவகுப்பில் புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.
    • ஆர்.எஸ்.எஸ்.வட தமிழக அமைப்பு செயலர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தேசியச் சிந்தனைகள் நினைவூட்டல் விழா ஆகிய முப்பெரும் விழா வீராம்பட்டினத்தில் நடந்தது.

    விழாவை முன்னிட்டு வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன்கோவிலில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் புறப்பட்டது. மகளிர் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வழியனுப்பினர். காக்கி, வெள்ளை சீருடை அணிந்த ஆர்.எஸ்.தொண்டர்கள் கையில் தடி ஏந்தியவாறு மேள, தாளம் முழங்க அணிவகுத்து வந்தனர்.

    அணிவகுப்பில் புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

    வீராம்பட்டினம் முக்கிய வீதிகளில் வந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி அரியாங் குப்பத்தில் நிறைவடைந்தது. பேரணி நிறைவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாயர் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆர்.துளசிராம் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்.வட தமிழக அமைப்பு செயலர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். புதுவை மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன், கோட்டத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பொதுக் கூட்டத்தின்போது பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டு கலந்தாய்வில் 167 இடங்கள் நிரம்பியுள்ளன.
    • மருத்துவ பரிசோதனை, பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட்டு சேர்க்கை ஆணை வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் பி.எஸ்.சி. நர்சிங் 94, ஹெல்த்சயின்ஸ் 87 என மொத்தம் 181 இடங்கள் உள்ளது.

    நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு கலந்தாய்வில் 167 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 14 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பு வதற்கான இறுதி கலந்தாய்வு   ஜிப்மர் அகாடமிக் சென்டரில் நடக்கிறது.

    சீட் பெற்ற மாணவர்க ளுக்கு 1-ந் தேதி மருத்துவ பரிசோதனை, பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட்டு சேர்க்கை ஆணை வழங்கப்படும்.

    • சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
    • தமிழ் ஒளி என்றத் தலைப்பில் பொதுச்செயலர் கவிஞர் திருபுவனை கலிய பெருமாள் தலைமையில் கவிதைப்போட்டி நடை பெற்றது. தொடர்ந்து சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சிந்தனையா ளர்கள் பேரவை சார்பில் கவிதை போட்டி மற்றும் 124-வது சிந்தனை அரங்கம் ஜோதி கண் பராமரிப்பு மைய அரங்கில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஒளி என்றத் தலைப்பில் பொதுச்செயலர் கவிஞர் திருபுவனை கலிய பெருமாள் தலைமையில் கவிதைப்போட்டி நடை பெற்றது. தொடர்ந்து சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

    புதுவை அண்ணல் காந்தி மக்கள் நலச் சங்க நிறுவனர் ஞான மூர்த்தி பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கவிஞர்க ளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் பேனர் வைக்க தடை செய்ய தலைமைச் செயலா ளர் தலைமையில் சமுக ஜனநாயக அமைப்புகள் அடங்கிய உயர் அதிகார குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் துணைத் தலைவர் மணிமேகலை, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், துணைச் செயலாளர்கள் விசாலாட்சி, ராஜாராம், உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் செயற் குழு உறுப்பினர் திவ்யா நன்றி கூறினார்.

    • கிராமத்து பின்னணியில் உருவான இத்திரைப் படத்தில் பிரபல நடிகை தீபா சங்கர்,கோதண்டம் ஆகிேயார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • புதுவை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் மறைந்த வெங்கட்ரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

     புதுச்சேரி:

    சஞ்சீவி்ராஜ் இயக்கத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் புதுவை கிருஷ்ணா முதன் முறையாக இசை அமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் வெள்ளந்தி.

    கிராமத்து பின்னணியில் உருவான இத்திரைப் படத்தில் பிரபல நடிகை தீபா சங்கர்,கோதண்டம் ஆகிேயார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் 3 பாடல்களை எழுதி இசை அமைத்து கிருஷ்ணா பாடி உள்ளார். பாடல்களை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமீபத்தில் வெளியிட்டார்.

    இதில் நிலவை பார்த்தேன் காதல் பாடல் எவ்வித விளம்பரங்கள் இன்றி 21,200 பார்வை யாளர்களை கடந்துள்ளது. கிருஷ்ணா மேலும் 2 புதிய படங்களுக்கு இசை அமைக்கிறார். புதுவையில் இருந்து தமிழ் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகும் கிருஷ்ணாவை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரபல இசை அமைப்பாளர் டி.இமான் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

    கிருஷ்ணாவின் தந்தை புதுவை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் மறைந்த வெங்கட்ரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக செயல்வழி மருத்துவ தினத்தின் விழிப்புணர்வாக 12-ம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • பள்ளி முதல்வர் எழில் கல்பனா, ஆசிரியைகள் தேவகுமாரி, வளர்மதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி செயல்வழி மருத்துவ சங்கம் சார்பில் உலக செயல்வழி மருத்துவ தின விழா முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. உலக செயல்வழி மருத்துவ தினத்தின் விழிப்புணர்வாக 12-ம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 12-ம் வகுப்பு முடித்தவுடன் மருத்துவம் சார்ந்ததுணை மருத்துவ படிப்பான செயல்வழி மருத்துவம் (4½ ஆண்டுகள்) மூலமாக மறு வாழ்வு சிகிச்சையான குழந் தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்பெறுவர் எனவும், இப்படிப்புக்கு வெளி நாட்டிலும் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இப்படிப்பு முடித்தவுடன் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி செயல்வழி மருத்துவ சங்க தலைவர் டாக்டர் இளவழகன் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். பள்ளி முதல்வர் எழில் கல்பனா, ஆசிரியைகள் தேவகுமாரி, வளர்மதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மிஷன்வீதி ஜென்ம ராக்கினி, தூய இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் லூர்தன்னை, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    • முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு செல்வா நகர் பகுதியைசேர்ந்த சஞ்சய்குமார் (வயது23). பழ வியாபாரி. இவரது தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (21) மற்றும் வெங்கடேசன் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இருதரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனை சஞ்சய்குமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மணி, வெங்கடேசன் ஆகியோர் சாலையில் கிடந்த ஒரு மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் தூக்கி எறிந்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×