search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புயல் விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளி-கல்லூரிகள் திறப்பு
    X

    புயல் விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளி-கல்லூரிகள் திறப்பு

    • 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ஒரு வார கால விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.

    அதேநேரத்தில் தண்ணீர் தேங்கிய, முகாம்களாக மாறிய தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, மூலகுளம், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப்பள்ளிகள், பண்டசோழநல்லூர், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலை பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூர், பனித்திட்டு, அரசு உயர்நிலைப்பள்ளிகள், கரையாம்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளி, முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தென்பெண்னை ஆற்றின் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×