என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கள்ளக்காதலி வீட்டில் காயத்துடன் கிடந்த ரேசன் ஊழியர் உயிரிழப்பு
- கரையாம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் பச்சையின் மகன் பிரவீன் புகார் அளித்தார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
புதுச்சேரியை அடுத்த பாகூரை சேர்ந்தவர் பச்சை (வயது 56). ரேசன் கடை ஊழியர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவு ஒகேனக்கல் சென்றுவிட்டு ஊர் திரும்பிய பச்சை, கள்ளக்காதலி வீட்டு வாசலில் தலையில் ரத்த காயத்துடன் கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் பச்சையை மீட்டு கரையாம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பச்சை இறந்து போனார். இது குறித்து கரையாம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் பச்சையின் மகன் பிரவீன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற போது பச்சையை யாராவது தாக்கியதில் காயமடைந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.