என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புயல், வெள்ளம் இல்லாத நிலையில் தமிழக அரசு மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்த முயற்சி- திருமாவளவன்
- மாநிலப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது.
- தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை மட்டும் கொண்டதாக இருக்க கூடாது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையுள்ளது. இந்த சூழலில் மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை வரையறுத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று புள்ளி விவரம் கூறுகிறது.
மாநிலப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது. வேறு சில அளவுகளும் தேவைப்படுகிறது என்பதனை தமிழ்நாடு மற்றும் ஆந்திர முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
எனவே தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை மட்டும் கொண்டதாக இருக்க கூடாது.
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிமன்றமே கண்டிக்கும் வகையில் இருப்பது வேதனைக்குரியது. இதன் பிறகாவது விமர்சனம் இல்லாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மழை, புயல், வெள்ளம் ஏதுமில்லை. மக்கள் பாதிப்பும் இல்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் திட்டமிட்டே விமர்சனம் என்ற பெயரில் அரசு மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது ஏற்புடையது அல்ல. நண்பர் விஜய் கட்சி ஆரம்பித்து முதல் முயற்சியாக மாநாடு நடத்த உள்ளார்.
இந்த மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.