search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற 107 வாகனங்களுக்கு அபராதம்
    X

    கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற 107 வாகனங்களுக்கு அபராதம்

    • கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டம் காரணமாக 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்ல கூடாது.
    • விதிமுறையை தாண்டி வேகமாக சென்ற இருசக்கர, 4 சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் போக்குவரத்து விதிமீறல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய நவீன ஸ்பீடு ரேடார் கன் போக்குவரத்து போலீசாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அதிவேக வாகனங்களை கண்டறிந்து அபாரதம் விதிக்க முடியும். கோரிமேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் போக்குவரத்து போலீசார் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்பீடு ரேடார் கன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்தனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டம் காரணமாக 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்ல கூடாது. இந்த விதிமுறையை தாண்டி வேகமாக சென்ற இருசக்கர, 4 சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் 107 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் கனரக வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம், மற்ற வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×