search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புயல் மழையால் வரத்து குறைந்தது- புதுச்சேரியில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
    X

    புயல் மழையால் வரத்து குறைந்தது- புதுச்சேரியில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

    • ஃபெஞ்சல் புயலையொட்டி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தொடர் கனமழையால் காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, டிச.4 -

    புதுச்சேரிக்கு தேவை யான காய்கறிகள் திருச்சி, ஒசூர், பெங்களூரு, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.

    இதேபோல், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து புதுச் சேரி பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறிகள் விற்பனைக்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

    பெஞ்ஜல் புயலையொட்டி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையால் காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புதுச் சேரிக்கான காய்கறி வரத்து வெகுவாக குறைந்து, அவற் றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று முன்தினம் வரை கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப் பட்டது ஆனால், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கேரட் ரூ.70-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஊட்டி கேரட் ரூ.70-ல் இருந்து ரூ.100 ஆகவும். முள்ளங்கி ரூ.35-ல் இருந்து ரூ.60 ஆகவும், பீட்ரூட் ரூ.45-ல் இருந்து ரூ.70 ஆகவும். சுரைக்காய் ரூ.25-ல் இருந்து ரூ.50 ஆகவும், பாகற்காய் ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும், மாங்காய் ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும், பச்சைமிளகாய் ரூ.55-ல் இருந்து ரூ.60 ஆகவும் சோளம் ரூ.35-ல் இருந்து ரூ.40ஆகவும், ஜாம் தக்காளி ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும், வரி கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.50க்கும், நாட்டு கத்திரிக்காய் ரூ.80-க்கும் அவரைக்காய் ரூ.80-க்கும், வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையும், சின்ன வெங்காயம் ரூ.75-க்கும், கொத்தவரங்காய் ரூ.60-க்கும். இஞ்சி ரூ.70-க்கும், கோஸ் ரூ.40-க்கும். பீன்ஸ் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இன்றும் பெரும்பாலான காய்கறிகள் ரூ.5 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்துள் ளது. காய்கறி விலை கிடுகிடு உயர்வால் இல்லதரசிகள் வேதனையடைந்துள்ளனர்.இதுபோல் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி பெரிய மார்க் கெட்டுக்கு திருவண்ணாமலை, திண்டுக்கல், கடலூர், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கனமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து, அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    Next Story
    ×