search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்க விருப்பம்- குஜராத் அணியில் இருந்து சுப்மன்கில் விலகலா?
    X

    ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்க விருப்பம்- குஜராத் அணியில் இருந்து சுப்மன்கில் விலகலா?

    • 2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார்.
    • 2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணி யில் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

    தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.

    இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சுப்மன்கில் விலகுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

    அகமதாபாத் நகரை மையமாக கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு அறிமுகம் ஆன ஹர்திக்பாண்ட்யா தலைமையில் அறிமுக போட்டியில் அந்த அணி கோப்பையை வென்றது. 2023-ல் 2-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.லில் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு தாவினார்.

    இதனால் சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் குஜராத் அணி 'லீக்' சுற்றோடு வெளியேறியது.

    2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார். குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொள்கிறது. இதே போல ரஷீத்கானும் அந்த அணியில் தக்க வைக்கப்படுகிறார்.

    இதற்கிடையே சுப்மன்கில் ஏலத்தில் வருவதற்கு மிக முக்கியமான அணிகள் விரும்புவதாக குஜராத் அணி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் குஜராத் அணியில் இருந்து வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே லக்னோ அணி நிர்வாகம் நிக்கோலஸ் பூரண், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மோஷின்கான், பதோனி ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 5 வீரர்களுக்கும் மொத்தம் ரூ.51 கோடி செலவழிக்கும் என்று தெரிகிறது.

    2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுலை தக்க வைத்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரு வேளை அவர் தேவைப்பட்டால் ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×