search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    எனது போராட்டம் முடியவில்லை; இப்போதுதான் தொடங்கியுள்ளது- வினேஷ் போகத் சொல்கிறார்
    X

    எனது போராட்டம் முடியவில்லை; இப்போதுதான் தொடங்கியுள்ளது- வினேஷ் போகத் சொல்கிறார்

    • எந்த பதக்கத்தையும் விட மேலான இந்த கவுரவத்துக்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருப்பேன்.
    • கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய போராட்டத்தில் வினேஷ் போகத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சண்டிகர்:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இறுதிப் போட்டி வரை சென்று இருந்தும் அவரால் பதக்கத்தை பெற முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம்.

    இந்த நிலையில் அரியானாவில் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகள் சார்பில் வினேஷ் போகத்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போன போது நான் மிகவும் துரதிருஷ்ட வசமானவள் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவுக்கு திரும்பிய எனக்கு அளித்த மிகப்பெரிய அன்பையும், ஆதரவையும் அனுபவித்த பிறகு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன்.

    எந்த பதக்கத்தையும் விட மேலான இந்த கவுரவத்துக்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருப்பேன்.

    எனது போராட்டம் முடியவில்லை. இப்போது தான் தொடங்கியுள்ளது. எங்கள் மகள்களின் (மல்யுத்த வீராங்கனைகள்) கவுர வித்திற்கான போராட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. எங்கள் உள்ளிருப்பு போராட்டத்தின் போதே நாங்கள் அதை கூறினோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்திய மல்யுத்த சம்மேள முன்னாள் தலைவரும், பா.ஜனதாவை சேர்ந்தவருமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் கூறி இருந்தார்கள். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய போராட்டத்தில் வினேஷ் போகத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×