என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
பலாத்கார வழக்கு- இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகா கைது
- பாலியல் விவகாரத்தில் குணதிலகா சிக்கி கொள்வது இது முதல் முறையல்ல.
- குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து இருந்தது.
சிட்னி:
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்று உள்ளார்.
31 வயதான குணதிலகா உலக கோப்பையில் கடைசியாக நமீபியாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு அவர் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக அஸ்கென் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் அணியோடு ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
இந்த நிலையில் கற்பழிப்பு வழக்கில் தனுஷ்கா குணதிலகாவை சிட்னியில் போலீசார் இன்று கைது செய்தனர்.
29 வயதான பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். கடந்த 2-ந்தேதி ஒரு வீட்டில் வைத்து நடந்தது. டேட்டிங் செயலி மூலம் அந்த பெண்ணுடன் குணதிலகா அறிமுகமானார். தனது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக அவர் மீது அந்த பெண் 4 குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவை சிட்னி போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.
20 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி இன்று அங்கிருந்து கொழும்பு புறப்பட்டது. குணதிலகா இல்லாமல இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது.
8 டெஸ்ட், 47 ஒரு நாள் போட்டி, 46 இருபது ஓவர் என 101 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2641 ரன்கள் எடுத்துள்ளார். 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
பாலியல் விவகாரத்தில் குணதிலகா சிக்கி கொள்வது இது முதல் முறையல்ல. 2018-ம் ஆண்டு இலங்கையில் நார்வே நாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அவரையும், அவரது நண்பரையும் போலீசார் விசாரித்தனர். இதனால் குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து இருந்தது.
ஆனாலும் இந்த விவகாரத்தில் குணதிலகா கைதாகவில்லை. அவருக்கு தனிப்பட்ட தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அவரது நண்பர் மட்டுமே கைதாகி இருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்