என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
புரோ கபடி லீக் போட்டி பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்
- இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டத்தில் அரியானாவே வெற்றி பெற்றது.
- அரைஇறுதி போட்டிகள் வருகிற 28-ந் தேதியும், இறுதி போட்டி மார்ச் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.
ஐதராபாத்:
10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் 12 வாரங்களாக நடைபெற்றது. 132 லீக் போட்டிகள் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவு பெற்றன.
புனேரி பல்தான் (96 புள்ளிகள்), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92), தபாங் டெல்லி (79), குஜராத் ஜெய்ண்ட்ஸ் (70), அரியானா ஸ்டிலர்ஸ் (70), பாட்னா பைரேட்ஸ் (69) ஆகிய அணிகள் முறையே முதல் 6 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் 2 இடத்தை பிடித்த புனே, ஜெய்ப்பூர் நேரடியாக அரையிறுதியில் விளையாடும்.
பெங்கால் வாரியர்ஸ் (55 புள்ளிகள்), பெங்களூரு புல்ஸ் (53), தமிழ் தலைவாஸ் (51), யு மும்பா (45), உ.பி. யோத்தாஸ் (31), தெலுங்கு டைட்டன்ஸ் (21) ஆகியவை முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.
நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி-ஆறாவது இடத்தை பிடித்த பாட்னா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் புனேயுடன் மோதும்.
இரு அணிகளும் மோதிய ஒரு ஆட்டம் 39-39 என்ற கணக்கில் 'டை'ஆனது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 38-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்த குஜராத்-ஐந்தாம் இடத்தை பிடித்த அரியானா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் ஜெய்ப்பூர் அணியுடன் விளையாடும்.
இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டத்தில் அரியானாவே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
அரை இறுதியில் நுழைய 4 அணிகளும் கடுமையாக போராடும். இதனால் எலிமினேட்டர் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.
அரைஇறுதி போட்டிகள் வருகிற 28-ந் தேதியும், இறுதி போட்டி மார்ச் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்