என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தொடரை வெல்லுமா?: நாளை 2-வது ஒருநாள் போட்டி
- முதல் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை.
- தொடக்கத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் பின்னர் ரன்களை வாரி கொடுத்து விட்டனர்.
ராய்ப்பூர்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.
350 ரன் இலக்கை நெருங்கி வந்த நியூசிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது.
இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக உள்ளது. முதல் ஆட்டத்தில் சுப்மன்கில் இரட்டை சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.
விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய அணி பந்து வீச்சில் முகமது சிராஜ் நல்ல நிலையில் உள்ளார். முகமது சமி, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.
முதல் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் பின்னர் ரன்களை வாரி கொடுத்து விட்டனர்.
இதனால் பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
டாம்லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலென், கான்வே, மிட்செல், பிலிப்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் பெர்குசன், சாண்ட்னர், டிக்னர் ஆகியோர் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர் பிரேஸ் வெல், முதல் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை நொறுங்கி 57 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கி வந்தது.
மேலும் பிரேஸ்வெல் பந்துவீச்சலும் சமீபகாலமாக அசத்தி வருகிறார். தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்