என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
புரோ கபடி 'லீக்' தமிழ் தலைவாஸ் அணி குஜராத்துக்கு பதிலடி கொடுக்குமா?
- குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
- தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.
அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
புரோ கபடி 'லீக்'போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18 ஆட்டத்தில் 2 வெற்றி, 16 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 7 வெற்றி, 10 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி 18-வது போட்டியில் குஜராத் ஜெயின்ட்சை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது. அந்த அணியிடம் ஏற்கனவே சென்னையில் நடந்த ஆட்டத்தில் 30-33 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதற்கு தமிழ் தலைவாஸ் அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றியை பெற்றது. கடந்த ஆட்டத்தில் ஜெய்பூரிடம் தோற்றது. அந்த அணி மீண்டும் எழுச்சி பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர். தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர், அஜிங்கயா பவார், ஹிமான்சு, சாஹர், அபிஷேக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
குஜராத் அணி 9 வெற்றி, 8 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் 6 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 43 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. மும்பை அணியும் 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 40 புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்