search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாயின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் அல்காரசுடன் மோதினார்.
    • இதில் ஜோகோவிச் அல்காரசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். சுதாரித்து கொண்ட கார்லோஸ் அல்காரஸ் 2வது செட்டை போராடி 7-5 என கைப்பற்றினார்.

    இதையடுத்து, மூன்றாவது மற்றும் நான்காவது செட்டை ஜோகோவிச் 6-1, 6-1 என கைப்பற்றினார். இதன்மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

    • தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஏ.டி.பி. தொடர் நடத்த முடியாத என அறிவித்தது
    • 2018-ல் இருந்து மகாராஷ்டிராவில் போட்டி நடைபெற்றது

    முதல்தர ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் ஏ.டி.பி., டென்னிஸ் விளையாட்டில் ஒரு உயர்வான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏ.டி.பி. உலக சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது என்பது டென்னிஸ் விளையாட்டை வளரச் செய்வதுடன், அந்த போட்டியை நடத்தும் நகரத்துக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

    ஏ.டி.பி. 250 டென்னிஸ் அடுத்த ஆண்டு புனே நகரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இனிமேலும் இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் 1996-ல் தொடங்கி சமீப காலம் வரை, "டாடா ஒபன் மகாராஷ்டிரா" என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது.

    2018-ம் வருடம் "தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன்" தங்களால் இந்த போட்டிகளை நடத்த இயலாது என தெரிவித்திருந்தபோது, இந்த வாய்ப்பு நமது நாட்டை விட்டு போகாமலிருக்க, "மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன்" இதை தொடர்ந்து நடத்த ஒப்புக்கொண்டது. மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன், மகாராஷ்டிர அரசாங்கம், ஐ.எம்.ஜி., மற்றும் ரிலையன்ஸ் அகியோரின் ஒரு கூட்டு முயற்சியால் இது நடந்தது.

    தற்பொழுது மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷனின் செயலர் சுந்தர் ஐயர் மற்றும் போட்டிகளுக்கான இயக்குனர் பிரஷாந்த் சுடார் ஆகியோர், ஐ.எம்.ஜி. மற்றும் ரிலையன்ஸ் (RISE Worldwide) ஆகியோருடனான தங்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன் ஏற்றுக்கொண்ட தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மேலும், நாட்டின் நலனுக்காகவும், இந்திய டென்னிஸ் வீரர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காகவும் மகாராஷ்டிர அரசாங்கம் மற்றும் டாடா குழுமத்துடனும் தாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் பொறுப்போடு திறம்பட நிறைவேற்றுவோம் எனவும் கூறினர்.

    ரபேல் நடால், கார்லோஸ் மோயா, வாரின்கா, மற்றும் மரின் சிலிக் போன்றோர்கள் பங்கேற்கும் பொழுது உலகளாவிய அளவில் இப்போட்டிக்கும், அதை நடத்தும் நாட்டிற்கும் பெருமை உண்டாகியது. ஆனால் உலகளவு பிரபலமாக தர வரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களை தொடர்ந்து பங்கேற்கச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இப்போட்டியை நடத்துபவர்களால் மரின் சிலிக்கை மட்டுமே பங்கேற்க வைக்க முடிந்தது.

    அதே சமயம், இந்திய வீரர்கள் ஏ.டி.பி.யின் தரவரிசையில் 1250 புள்ளிகளுக்கு 80 வரை மட்டுமே பெற முடிந்தது. அவர்களால் இரண்டாவது சுற்றுக்கு மேல் முன்னேற முடியவில்லை.

    தரவரிசை பட்டியலில் ஒற்றையர் ஆட்டப்பிரிவில் முதல் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய ஆட்டக்காரர் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் என்றளவில் 225-வது இடத்தில்தான் நாகலும், அவருக்குப் பின் 374-வது இடத்தில் முகுந்த் சசிகுமாரும் உள்ளனர்.

    யூகி பாம்ப்ரி, சுமித் நகல், பிரக்யேஷ் குணேஸ்வரன் ஆகியோர் சேல்ஞ்சர்ஸ் போட்டிகளில் பங்கேற்று தரவரிசையில் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர்.

    லியாண்டர் பேஸ் மற்றும் மகேஷ் பூபதி ஓய்வு பெற்றதாலும், நட்சத்திர அந்தஸ்து உள்ள வீரர்கள் பெருமளவில் பங்கேற்காததாலும் இப்போட்டியை நடத்த தேவையான பொருட்செலவும், வசதிகளும், விளம்பரதாரர்களும் கிடைக்கவில்லை. உள்நாட்டு நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் பெரும் விளம்பரதாரர்கள் கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது.

    தனது 5-வருட ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ. 75 கோடி மகாராஷ்டிர மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன் செலவு செய்திருப்பதாக தெரிகிறது. இதில் வெறும் ரூ.5 கோடி மட்டுமே மகாராஷ்டிர அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.

    ஆனாலும், இந்திய அளவில் இரட்டையர் டென்னிஸ் பிரிவு ஆட்டக்காரர்களுக்கு இந்த போட்டிகள் பயனளித்ததாக கூறலாம். தற்போதைய தலைமுறையினரில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், என். பாலாஜி, மற்றும் சக்தி மயினேனி ஆகியோர் இந்த போட்டிகளை பயன்படுத்தி தங்களின் தரவரிசையை முன்னே கொண்டு செல்லவும், பரிசுத்தொகைகளை வெல்லவும் செய்தனர்.

    டபிள்யு.டி.ஏ. எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் போட்டிகளும் இந்தியாவின் கைவிட்டு செல்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, இந்தியாவை விட்டு போகும் ஏ.டி.பி. போட்டிகளுக்கான வாய்ப்பு, அனேகமாக ஹாங்காங் நாட்டிற்கு செல்லலாம் என்று பேசப்படுகிறது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நடைபெற்றது.
    • நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது.
    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், சபலெங்கா, கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில், 7-6, 6-7, 7-5 என்று 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று சபலெங்காவை வீழ்த்தி முச்சோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    மற்றொரு ஆட்டத்தில், பிரேசில் வீராங்கனை பீட்ரில் ஹாடட் மையாவை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
    • இன்று நடந்த காலிறுதியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ கஃபுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையாவை சந்திக்கிறார்.

    • முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடந்தன.
    • பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, துனிசியாவின் ஆன்ஸ் ஜபேரை வீழ்த்தினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் இன்று காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹாடட் மையா, 7-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஜபேர் 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஹாடட் மையா அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-1 என கைப்பற்றினார். அத்துடன் அரை இறுதிக்கும் முன்னேறினார்.

    உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள ஹாடட் மையா, கடந்த 55 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரையிறுதியை எட்டிய முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

    • பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
    • அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.

    அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    • ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.
    • ஜோகோவிச் மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 3-1 செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    முதல் செட்டை 4-6 என இழந்த போதிலும் அடுத்த மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    • சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருப்பவரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த 28-ம் நிலை வீரரான டிமிட்ரோவை எதிர் கொண்டார்.

    இதில் சுவரேவ் 6-1, 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதுகிறார்.

    எட்செவரி 4-வது சுற்றில் 27-வது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார். 23 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 4-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), 6-வது வரிசையில் உள்ள ஹோல்கர் ருனே (டென்மார்க்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) ஹாதத்மையா (பிரேசில்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.

    • உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனையை வென்றார்.
    • காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் துனிசியா வீராங்கனை ஓன்ஸ் ஜபேர், அமெரிக்கா வீராங்கனை பெர்னார்டா பெராவுடன் மோதினார். இதில் ஜபேர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கஃப், ஸ்லோவோகினியாவின் அன்னா கரோலினாவுடன் மோதினார். இதில் கஃப் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை லெசியாவுடன் மோதினார்.

    முதல் செட்டில் இகா ஸ்வியாடெக் 5-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது உடல்நலக் குறைவால் லெசியா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.

    • ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.
    • இதில் ரூட் 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயைச் சேர்ந்த காஸ்பர் ரூட், சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோவுடன் மோதினார்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை ரூனே 7-6 (10-7) என வென்று, காலிறுஇதிக்கு முன்னேறினார்.

    • ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த 17-ம் நிலை வீரரான லாரன்சோ முசட்டியை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-3 , 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்னொரு ஆட்டத்தில் 5-ம் நிலையில் உள்ள ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா சுவிட்டோலினா 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த 9-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 28-வது வரிசையில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ×