என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
25 கல்குட்டைகளில் தேங்கி கிடக்கும் 0.375 டி.எம்.சி. மழைநீர் சென்னை குடிநீருக்கு பயன்படுத்த முடிவு
- தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.
- தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை:
மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. 25க்கும் மேற்பட்ட கல்குட்டைகளில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் பருவமழை காலங்களில் அதிக அளவில் வரும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதை தவிர்க்கும் வகையிலும், தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.
இந்திட்டத்தின் படி கல்குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து சென்னைக்கு குடிநீராக சப்ளை செய்யப்படும்.
தற்போது குடிநீர் வாரியம் ஆய்வு செய்ததில் 25 கல்குட்டைகளில் 0.350 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.
இந்த தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாளில் முடிந்து விடும். அதன் பிறகு தினமும் 30 மில்லியன் லிட்டர் அளவுக்கு செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கல்குட்டைகளில் இருக்கும் தண்ணீரை எடுத்துவிட திட்டமிட்டு உள்ளனர். இதனால் மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் கல் குட்டைகளில் தேங்கும். கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவது தவிர்க்கப்படும்.