என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
துபாய் தீ விபத்தில் 2 பேர் பலி சோகத்தில் மூழ்கிய கிராமம்- உடலை வாங்க உறவினர்கள் சென்னை விரைந்தனர்
- கட்டிடத்தில் தீ பற்றி எரிவதை கண்ட குடு சாலிய கூண்டு தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றபோது பலியானது தெரிய வந்தது.
- ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் துபாய் தீ விபத்தில் பலியான சம்பவம் ராமராஜபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துபாய் தீ விபத்தில் 2 பேர் பலியானதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர்.
துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது.
இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வசித்து வந்த இந்தியர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர்கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த குடு சாலிய கூண்டு (49) மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் (43) ஆவார்கள்.
இதில் குடு சாலிய கூண்டு தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர். கட்டிடத்தில் தீ பற்றி எரிவதை கண்ட குடு சாலிய கூண்டு தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றபோது பலியானது தெரிய வந்தது.
பலியான மற்றொருவரான இமாம் காசிம் அப்துல் காதர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் துபாய் தீ விபத்தில் பலியான சம்பவம் ராமராஜபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான 2 பேரின் உறவினர்களும் அங்கு துக்கம் விசாரிக்க வந்தனர்.
ஆனால் 2 பேரின் குடும்பத்தினரும் நேற்று முன்தினம் இரவே சென்னை சென்றுவிட்டனர். இதனால் இருவரது வீடும் பூட்டியே உள்ளது.
துபாய் தீ விபத்தில் பலி யான 2 பேரின் உடல்களும் இன்னும் 3 நாட்களில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். உடலை பெற்றுக் கொள்ளவே இருவரது உறவினர்களும் சென்னை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் பலியான 2 பேரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்