என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தீபாவளி பட்டாசு விபத்தை எதிர்கொள்ள 6,673 தீயணைப்பு வீரர்கள் தயார்
- தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 6,563 பட்டாசு கடைகளுக்கும், சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக தீயணைப்பு துறை சார்பில் தியாகராய நகரில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
உஸ்மான் சாலை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தப் பேரணியை தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பி.கே.ரவி தொடங்கி வைத்தார்.
தீயணைப்புத் துறை அதிகாரிகள், வீரர்கள், பள்ளி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பர்கிட் சாலை வழியாகச் சென்ற பேரணி ராமகிருஷ்ணா பெண்கள் மாதிரி பள்ளியில் நிறைவடைந்தது.
முன்னதாக டி.ஜி.பி. பி.கே.ரவி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாநிலம் முழுவதும் 1,610 கல்வி நிலையங்கள், 1,120 பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம்.
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 6,563 பட்டாசு கடைகளுக்கும், சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதே போல், தீயணைப்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.