என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. 19-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- தி.மு.க. ஆட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தி.மு.க. அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் எவ்வித அக்கறையும் காட்டாமல், வெற்றுத் தம்பட்டம் அடித்து வருவதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதிகளில், பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தி.மு.க. ஆட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைத்து சிட்லபாக்கம்-மாடம்பாக்கம் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாடம்பாக்கம் ஏரி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கிணறுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி, குடிநீரின் தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிட்லபாக்கம் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களின் நிலைமை படுமோசமாக உள்ளதோடு, ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி வருகிறது. குப்பை சேகரிப்பு என்பதே இல்லாததால் மக்கள் பலவித வியாதிகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
சிட்லபாக்கம் ஜெயேந்திரர் தெருவில் அரசுக்கு சொந்தமான பெரிய கிணற்றில் இருந்து கோடை காலத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இந்த கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு பாழடைந்து வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் முழுவதும் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய தி.மு.க. அரசையும், மாநகராட்சியையும் கண்டித்தும்; பாதாள சாக்கடை திட்டத்தினை அமல்படுத்த வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், 'சிட்லபாக்கம் முதல் மற்றும் இரண்டாம் பிரதான சாலை சந்திப்பில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், தலைமையில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா முன்னிலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்