search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழி பற்றி அவதூறு: நசரத்பேட்டை போலீசில் தி.மு.க புகார்
    X

    அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழி பற்றி அவதூறு: நசரத்பேட்டை போலீசில் தி.மு.க புகார்

    • அகரம் மேல் ஏ.ஜி. ரவி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
    • கலை நிகழ்ச்சியில் அவதூறாக பாடல் பாடியுள்ளதுடன் அதை அக்கட்சியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர்.

    பூந்தமல்லி:

    மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறாக பாடல் பாடியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், திமுக மாவட்ட கலை இலக்கிய மற்றும் பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளருமான அகரம் மேல் ஏ.ஜி. ரவி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், அதிமுக சார்பில் மதுரையில் அக்கட்சியின் பொன்விழா மாநாடு கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து கலை நிகழ்ச்சியில் அவதூறாக பாடல் பாடியுள்ளதுடன் அதை அக்கட்சியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர். இது திமுகவினருடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மக்கள் பிரதிநிதிகளாக உள்ள திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது இவ்வாறு அவதூறான அருவருக்கத்தக்க விதமாக பாடலை, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகள் மீதும் மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய எடப்பாடி பழனிசாமி, மாநாடு பொறுப்பாளர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது பொதுவெளியில் பெண் தலைவரை கொச்சைப்படுத்தியதற்காகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட இவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×