search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.ம.மு.க. மாவட்ட செயலாளரை வழிமறித்து தாக்கிய கும்பல்: கார் கண்ணாடி உடைப்பு-ஒருவர் கைது
    X

    அ.ம.மு.க. மாவட்ட செயலாளரை வழிமறித்து தாக்கிய கும்பல்: கார் கண்ணாடி உடைப்பு-ஒருவர் கைது

    • வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.
    • தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ஜெயங்கொண்டம்:

    பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் சீர்காழியில் நடைபெ ற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் புறப்பட்டார். காரை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் ஜெயங்கொண்டம் வாரியாங் கோவில் பகுதியில் வந்த போது 2 வாலிபர்கள் அவரது காரை திடீரென வழிமறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.

    பின்னர் அவரது கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயனுக்கு முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்தது தெரியவந்தது. பின்னர் தப்பி ஓடிய இலையூர்மேலவழி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சிவா (வயது 24) என்பவரை கைது செய்தனர். ரோட்டு தெருவை சேர்ந்த பூபாலன் என்பவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×