search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதலாக வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
    X

    தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதலாக வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது.
    • மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் ஆகியவை தான் இழப்புக்கான முதன்மைக் காரணம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அளவிலான மின்சார சந்தையில் இருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடம் இருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு கட்டணம் மற்றும் வரியாக ஏற்கனவே வசூலிக்கப்படும் ரூ.1.96 காசுகளுடன் கூடுதல் வரியாக 34 காசுகள் சேர்த்து வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

    மின்சாரக் கொள்முதல் செலவு அதிகரித்து இருப்பது, மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் ஆகியவை தான் இழப்புக்கான முதன்மைக் காரணம் என்று கூறப்படும் நிலையில், அதை சரி செய்யாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது, தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கும் கூடுதல் வரி விதிப்பது என தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தாக்குதல்களை தமிழக அரசு தொடுப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×