search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • காந்தி மண்டப வளாகத்தில் உள்ள வ.உ.சி.யின் உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • ப.சுப்பராயனின் கொள்ளுப் பேரன் மோகன் குமாரமங்கலம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள வ.உ.சி.யின் உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவர், சமூகநீதிக் கோட்பாடுகளுக்குச் சட்டவடிவம் கொடுத்தவர் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன். அவரது சேவைகளை நினைவு கூறும்வகையில், அவருக்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று 2021-2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற் கிணங்க, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை, மாகாணத்தின் முன்னாள் முதலமைச் சர் டாக்டர் ப.சுப்பராயனின் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் இ. பெரியசாமி, எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், அர. சக்கரபாணி, பி.கே. சேகர்பாபு, டாக்டர் மா. மதிவேந்தன், மேயர் ஆர். பிரியா, எம்.எல்.ஏ.க்கள் இ.ஆர். ஈஸ்வரன், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, ஜே.எம்.எச். ஹசன் மவுலானா, துணை மேயர் மு. மகேஷ்குமார், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர்.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், டாக்டர் ப.சுப்பராயனின் கொள்ளுப் பேரன் மோகன் குமாரமங்கலம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×