search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைப்பு- கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
    X

    வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைப்பு- கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

    • அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக உள்ளது. வரத்து 517கனஅடி, நீர்திறப்பு 100 கனஅடி, இருப்பு 2060 மி.கனஅடி.
    • வைகை அணையில் இருந்து மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கடந்த 2 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கேரளாமாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக உள்ளது. வரத்து 517கனஅடி, நீர்திறப்பு 100 கனஅடி, இருப்பு 2060 மி.கனஅடி.

    வைகை அணையில் இருந்து மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கடந்த 2 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 872 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 372 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 53.04 அடியாக உள்ளது. இருப்பு 2416 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.80 அடி, வரத்து 57 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.90 அடி, வரத்து 96 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    இந்த அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் ஒரேநாளில் 10 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரியாறு 8.4, தேக்கடி 6.4, கூடலூர் 14.2, சண்முகாநதி அணை 22.4, உத்தமபாளையம் 10.6, போடி 14.2, வைகை அணை 2, சோத்துப்பாறை 12, மஞ்சளாறு 2, பெரியகுளம் 3.4, வீரபாண்டி 12.4, அரண்மனைப்புதூர் 4.6, ஆண்டிபட்டி 2.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×