search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே மகளை டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட டி.ஐ.ஜி. விஜயகுமார்- ஐ.பி.எஸ். நண்பர்கள் கண்ணீர்
    X

    ஒரே மகளை டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட டி.ஐ.ஜி. விஜயகுமார்- ஐ.பி.எஸ். நண்பர்கள் கண்ணீர்

    • செக்ஸ் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கையும் கையாண்டுள்ளார்.
    • ஐ.பி.எஸ். அதிகாரி அந்தஸ்துக்கு வருவதற்கு முன்னர் நேரடி டி.எஸ்.பி. யாக விஜயகுமார் பணி புரிந்துள்ளார்.

    துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். அவரது திடீர் தற்கொலை தமிழக காவல் துறையையே கலங்கடித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு ஒரே மகள் நந்திதா. அவரை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். பிளஸ்-2 முடித்துள்ள மகள் நீட் தேர்வு எழுதி தேர்வாகி இருக்கும் நிலையில் எந்த கல்லூரியில் மகளை சேர்க்கலாம் என்பது பற்றியும் விஜயகுமார் ஆலோசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக சென்னையில் பணியாற்றிய விஜயகுமார் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக திறம்பட பணியாற்றியவர் ஆவார்.

    தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நீட் முறைகேடு வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி பல்வேறு தகவல்களை திரட்டிய விஜயகுமார் செக்ஸ் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கையும் கையாண்டுள்ளார்.

    சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டு பணியாற்றியபோது பொது மக்களின் புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தி பணியாற்றினார்.

    பணி காலத்தின் போது சிறுக... சிறுக சேர்த்து வைத்த பணம் உள்ளது. அதை வைத்து மகளை படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் கையேந்திவிடக் கூடாது என்பதிலும் உறுதியுடன் இருந்துள்ளார். இதனை அவரது சக ஐ.பி.எஸ். நண்பர்கள் கூறி கண்ணீர்விட்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் சென்னை அண்ணா நகரில் துணை கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வந்ததும் கோவையில் பணியமர்த்தப்பட்டதை அவர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்ணாநகரில் அவர் பணியாற்றிய போது பணியில் இருந்தவர்கள் இப்போதும் அங்கு பணியில் உள்ளனர். அவர்கள் விஜயகுமார் மறைவு செய்தி கேட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

    ஐ.பி.எஸ். அதிகாரி அந்தஸ்துக்கு வருவதற்கு முன்னர் நேரடி டி.எஸ்.பி. யாக விஜயகுமார் பணி புரிந்துள்ளார்.

    2007-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று நேரடி டி.எஸ்.பி.யான விஜயகுமார், பணியில் இருந்துக் கொண்டே 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வை எழுதினார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்று சிறந்த காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×