என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் திருவிழா
- பொது தேர்தல் போன்று மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
- ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.
மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமை நிர்ணயம் செய்யவும் தேர்தல் மற்றும் ஓட்டுரிமை பற்றி மாணவிகள் தனது பள்ளி பருவத்திலேயே தெரிந்து கொள்ளவும் விழிப்புணர்வுக்கான தேர்தல் திருவிழா மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் மாணவியர் தலைவி மற்றும் வகுப்பு தலைவியை தேர்ந்தெடுக்கும் விழாவிற்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தங்கினார். தலைமை ஆசிரியர் ஜெகஜோதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைவிக்கு பிளஸ்-2, மாணவிகள் 6 பேரும், வகுப்பு தலைவிக்கு அந்தந்த வகுப்பு மாணவிகளும் போட்டியிட்டனர்.
இதற்காக கடந்த மாதம் 30ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். 3, 4, 5 தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தனர். இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பொது தேர்தல் போன்று மாணவிகள் வரிசை யில் நின்று வாக்களித்தனர். ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. ஓட்டு போட்டவர்கள் கையில் மை வைக்கப்பட்டது.
பின்னர் அவை அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேர்தல் திருவிழாவில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்