search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெம்போவில் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்
    X

    டெம்போவில் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

    • கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் டெம்போவில் இருந்த 760 கிலோ எடையுள்ள 68 மூட்டையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் காரிமங்கலம் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக சென்ற டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது அதிலிருந்து டிரைவர் உட்பட இரண்டு பேர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கேத்மாரனஅள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 33) என தெரிய வந்தது.

    மேலும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் டெம்போவில் இருந்த 760 கிலோ எடையுள்ள 68 மூட்டையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

    இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே என் புரா பகுதியைச் சேர்ந்த சஷாங் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×