search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்கள் பாலியல் புகார்- தலைமறைவான தயாரிப்பாளர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
    X

    பார்த்திபன் வீடியோவில் பேசிய காட்சி.

    பெண்கள் பாலியல் புகார்- தலைமறைவான தயாரிப்பாளர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

    • பார்த்திபன் மீது மேலும் 2 பெண்கள் கோவையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து புகார் செய்தனர்.
    • வீடியோவில் தான் குற்றமற்றவன் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    கோவை:

    கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). சினிமா தயாரிப்பாளராவும், அரசியல் கட்சி ஒன்றில் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.

    இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் சினிமாவில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பதாக பார்த்திபன் ஆசைவார்த்தை கூறியதாகவும், பொள்ளாச்சியில் நடிகை தேர்வுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை அவர் கற்பழித்து விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.

    இதனால், தான் கர்ப்பமானதாகவும் குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது எனவே கர்ப்பத்தை கலைத்து விடும்படி கூறி கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே பார்த்திபன் மீது மேலும் 2 பெண்கள் கோவையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து புகார் செய்தனர். அவர்களும் பார்த்திபனால் பாலியல் பாதிப்புக்குள்ளானதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தனர். அந்த புகார்களின் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் தலைமறைவாக உள்ள பார்த்திபன் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் குற்றமற்றவன் என தெரிவித்துள்ளார்.

    மேலும் என் மீது புகார் கொடுத்த பெண்கள் பலமுறை உதவி கேட்டனர். அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் நான் நான் பண உதவி செய்துள்ளேன். ஆனால் அவற்றையெல்லாம் மறந்து என் மீது வேண்டுமென்றே புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் என்னிடம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போது பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறி உள்ளார். சுமார் 3 நிமிடம் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த வீடியோவை போலீசாரும் கைப்பற்றி உள்ளனர். பார்த்திபன் கூறுவதில் ஏதும் உண்மை உள்ளதா என்பதை விசாரிக்கும் அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×