search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காலாவதியான பதவியில் இருப்பவர்கள் பேசுவதை பெரிது படுத்த வேண்டாம்- கனிமொழி எம்.பி. பதிலடி
    X

    காலாவதியான பதவியில் இருப்பவர்கள் பேசுவதை பெரிது படுத்த வேண்டாம்- கனிமொழி எம்.பி. பதிலடி

    • நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம், ஜாதி, மத பிரச்சனைகள் என்று ஒரு நிலையில்லாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    • இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்கு என்று தனி நலவாரியம் அமைத்தது கருணாநிதிதான்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கோவண்டாகுறிச்சியில் நடைபெறும் ஒரு நிழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. வந்தார். அப்போது அவர் பேசும்போது,

    நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம், ஜாதி, மத பிரச்சனைகள் என்று ஒரு நிலையில்லாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எப்போது? யாருக்கு மனநிலை பாதிக்கப்படும் என்பது தெரியாத நிலையில் உள்ளோம். எனவே மனநலம் சார்ந்த ஒரு கொள்கையை தமிழக அரசு வகுத்துக் கொண்டிருக்கிறது.

    கொரோனா உள்ளிட்ட எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், குணமடைந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பி விடுகிறார்கள். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வீடு திரும்புவது தான் சிக்கலாக இருக்கிறது.

    மூன்றாம் பாலினத்தவர், திருநங்கைகள் என்று இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து, அவர்களாலும் இந்த சமூகத்துக்கு உரிய பங்களிப்பு வழங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

    இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்கு என்று தனி நலவாரியம் அமைத்தது கருணாநிதிதான். அவரது வழியில் தற்போதைய தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது,

    மனநல இல்லங்களை திறப்பதற்காக மனநலம் சார்ந்த கொள்கைகளை அரசு வகுத்து வருகிறது என்றார், திராவிட மாடல் ஆட்சி காலாவதியாகிவிட்டதாக கவர்னர் கூறியது தொடர்பாக கேட்டதற்கு, "காலாவதியான பதவியில் இருப்பவர்கள் பேசுவதை எல்லாம், நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றுகனிமொழி பதிலடி கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், எஸ்.பி., சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×