என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்- ஜி.கே.வாசன்
- நவம்பர் மாதம் 23-ந்தேதி வரை தினந்தோறும் 2,600 கன அடி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்துள்ளது.
- தமிழகத்தில் தற்பொழுது பெய்யும் மழை இயல்பை விட 40 சதவீதம் குறைவுவாக பெய்திருக்கிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் நேற்று கூட்டப்பட்ட காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக விவசாயத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 23-ந்தேதி வரை தினந்தோறும் 2,600 கன அடி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் பெரிதும் நம்பியிருக்கும் வடகிழக்கு பருவமழை கூட முறையாக பெய்யாமல், மழை பொழிவு குறைவாகவே இருப்பது துரதிஷ்டம். தமிழகத்தில் தற்பொழுது பெய்யும் மழை இயல்பை விட 40 சதவீதம் குறைவுவாக பெய்திருக்கிறது. இதுவரை 19 செமீ பெய்திருக்க வேண்டிய மழை தற்பொழுது 12 செ.மீ அளவுதான் பதிவாகியிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. ஆகவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க காவிரி மேலாண்மை ஆணையம் மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.