என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம்
- உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரை பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த 28-ந்தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரை பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிவக்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் விஜயகாந்த் வீட்டுக்கும் நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தன்புகழையும் திறனையும் சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த எங்கள் சங்கத்தின் பெருந்தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது.
வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.