என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்- துரை வைகோ தலைமையில் நடக்கிறது
- தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது.
- ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
கடந்த 4-ந்தேதி வீசிய மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மீள முடியாத துயரத்தில் தென்மாவட்ட மக்கள் சிக்கி இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அதனை ஏற்காமல் போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. அவ்வாறு தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டித்து தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது தலைமையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.