என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் நடிகர் கமல், திருமாவளவனுடன் திடீர் சந்திப்பு
- மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
- தமிழ்நாடு-புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து பேசினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை சென்னையில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுவை மாநிலத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. வைத்திலிங்கம் அவர்களின் தலைமையில் முன்னணி தலைவர்கள் தாய்மண் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அண்மையில் நடந்தேறிய நாடாளுமன்றத் தேர்தலில் சிறுத்தைகளின் பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு… pic.twitter.com/Ixxe9AFqmk
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 27, 2024
மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாசலம், புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சந்திர மோகன் மற்றும் தமிழ்நாடு-புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனையும் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர், நம்மவர் திரு.@ikamalhaasan அவர்களை, புதுச்சேரி காங்கிரஸ் கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. வைத்திலிங்கம்@Ve_Vaithilingam , புதுச்சேரி முன்னாள் முதல்வர் திரு. நாராயணசாமி @VNarayanasami , புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் திரு.… pic.twitter.com/dd9CkudfM7
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 27, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்