search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி பகவத்கிஷன் தரிசனம்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி பகவத்கிஷன் தரிசனம்

    • மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத்குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
    • முக்கடல் சங்கமம் பகுதிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தார்.

    கன்னியாகுமரி:

    மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் 3 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் இன்று அதிகாலையில் தனது மனைவியுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு உள்ள ஸ்ரீகாலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன்சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசௌந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின்னர் முக்கடல் சங்கமம் பகுதிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தார். பின்னர் அங்கு இருந்து கார் மூலம் கோவளம் கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமன பகுதி கடற்கரையினை சுற்றிப்பார்த்தார்.

    அப்போது பா.ஜ.க. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் உடன் இருந்தார்.

    Next Story
    ×