search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேரளாவில் நிபா வைரஸ் பரவல்- தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
    X

    கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை போடி முந்தல் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்யும் காட்சி

    கேரளாவில் நிபா வைரஸ் பரவல்- தேனி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

    • தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு வாலிபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி எல்லைப்பகுதிகளில் நோய் பரவல், தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான குமுளி, போடி மெட்டு, கம்பம் மெட்டு ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    எல்லைப்பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னரே அவர்கள் கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் குமுளியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கம்பம், போடி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளுடன் யாராவது வந்தால் உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×