search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு மின்தடை ஏற்படாது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு மின்தடை ஏற்படாது

    • கடந்த 9-ந்தேதி 120.25 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.
    • செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரை காற்றாலை மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மின்சார தேவை குறைந்துள்ளது. இந்த ஜூலை மாதத்துக்கான மின்சார தேவை 16,100 மெகாவாட் ஆகும். ஆனால் இந்த மாதம் மின் உற்பத்தி 17,183 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வருகிற ஆகஸ்டு மாதத்தில் மின்சார தேவை 16,100 மெகாவாட் ஆக இருக்கும். ஆனால் 17,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் செப்டம்பர் மாதத்தில் தேவை 15,800 மெகாவாட் ஆகவும், உற்பத்தி 16,617 மெகாவாட் ஆகவும், அக்டோபர் மாதத்தில் தேவை 15,000 மெகாவாட் ஆகவும் உற்பத்தி 17,375 ஆகவும், நவம்பர் மாதத்தில் தேவை 14,400 மெகாவாட் ஆகவும் உற்பத்தி 16,296 மெகாவாட் ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஜூலை மாதம் முதல் வருகிற நவம்பர் மாதம் வரை மின்தட்டுப்பாடு ஏற்படாது. இந்த 5 மாதங்களுக்கும் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    கடந்த 9-ந்தேதி 120.25 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இது மாநிலத்தின் நுகர்வில் 35 சதவீதம் ஆகும். இந்த மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள் 100 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் தினமும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.

    செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரை காற்றாலை மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 5 மாதங்கள் மின் உற்பத்திக்கு பருவமழை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவை கைகொடுக்கும். இந்த காலகட்டத்தில் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×